முதலில் விக்கெட் கீப்பர் இல்லை.. இப்போது கேப்டனும் இல்லை – ஆஸ்திரேலிய அணியை சாடிய மைக்கேல் கிளார்க்

ஆஸ்திரேலிய அணியானது எப்போதுமே மற்ற அணிகளுக்கு ஒரு சவாலான அணியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் கூட இந்திய அணியை சுலபமாக ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இதனால் தற்போது நடந்து வரும் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா மிகவும் ஆபத்தனா அணியாக இருக்கும் என

By ·

ஆஸ்திரேலிய அணியானது எப்போதுமே மற்ற அணிகளுக்கு ஒரு சவாலான அணியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் கூட இந்திய அணியை சுலபமாக ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இதனால் தற்போது நடந்து வரும் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா மிகவும் ஆபத்தனா அணியாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் ஐந்து முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா தற்போது தடுமாறி வருகிறது.

சொல்லப்போனால் தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான அவர்களுக்கு 300க்கும் அதிகமான ரன்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில் அஸ்திரலிய அணியால் 200 ரன்களை கூட தாண்ட முடியவில்லை. இதனால் பலரும் ஆஸ்திரேலிய அணியின் மீதும் கேப்டன் பாட் கம்மின்ஸ் மீதும் விமர்சனங்களை வைத்தனர். மேலும் கேப்டனை மற்ற வேண்டும் என்ற பேச்சுகளும் அங்கங்கே எழுந்தது. இந்த நிலையில் தான் இது குறித்து பேசியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான மைக்கேல் கிளார்க்.

அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறுகையில் “நேற்று இரவு பேட் கம்மின்ஸ் இந்த ஆட்டத்தில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்று கேள்விப்பட்டேன். நாங்கள் எங்கள் விக்கெட் கீப்பரை அணியில் இருந்து நீக்கினோம். அவர் அணியில் முக்கியமானவர்களில் ஒருவர். அதனால் அவர் ஒரு ஆட்டத்தைப் பெற்று பின்னர் கழற்றி விடப்பட்டார்.

இப்போது நாங்கள் எங்கள் கேப்டனை நீக்க போகிறோம் என்று பேசப்படுகிறது. அலெக்ஸ் கேரிக்கு ஒரே ஒரு ஆட்டம் கொடுக்கப்பட்டால், அவர் இந்தியாவில் இருக்கக்கூடாது. அவர்கள் அவரை அழைத்துச் சென்றிருக்கக்கூடாது. பாட் கம்மின்ஸ் நீக்கப்படுப்பார் என்றால் நீங்கள் தவறான கேப்டனை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்

அணியின் தயாரிப்பு சரியானது என்று வீரர்கள் கூறுவதை நான் கேள்விப்பட்டேன்.உங்களிடம் போதுமான கிரிக்கெட் விளையாட்டுகள் இருந்தன, ஆனால் நீங்கள் அந்த விளையாட்டுகளைப் பயன்படுத்தவில்லை. உங்கள் சிறந்த வீரர்களை நீங்கள் தேர்வு செய்யவில்லை. பேட்டிங் முதலில் செய்வதா அல்லது பௌலிங் செய்வதா என்பது குறித்து சரியாக நீங்கள் முன்னேற்பாடோடு இருக்கவில்லை.

யார் எங்கே விளையாடுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, சில கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக அனுமதிக்க உங்கள் கேப்டனை கூட நீங்கள் தேர்வு செய்யவில்லை. பேட் கம்மின்ஸ் போதுமான போட்டிகளில் கேப்டனாக இல்லை. இந்தியாவில் அவர் விளையாட முடியும், ஆனால் அவர்கள் பாட் கம்ம்மிங்ஸை ஓய்வெடுக்க வைத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார் மைக்கேல் கிளார்க்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை