அணி சரியில்லை என்றால் எதுவும் செய்ய முடியாது… ஹர்திக் பாண்டிய தைரியமான ஆளு – சூசகமாக பேசிய கிளார்க்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இது வரை மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாமல் புள்ளி பட்டியலில் கடை
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இது வரை மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் அணியில் ஒருங்கிணைப்பில்லை என்றும் அணியில் இரண்டு பிரிவாக உள்ளார்கள் என்று தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.
அதற்கான காரணம் என்னவென்றால் கடந்து இரண்டு வருடங்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பையில் இந்தியன்ஸ் அணி டிரேடிங்கில் மூலம் வாங்கியது. அப்போதே அது மும்பை அணிக்குள் சில் சலசப்புக்களை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல் சில நாட்களிலே அவரை கேப்டனாகவும் மாற்றியது. மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் ஷர்மாவை மும்பை அணியின் வீரராக மாற்றியது. இது மும்பை அணி என்று ரசிகர்களிடையே பெரும் ஆதங்கத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது,
மேலும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனிலேயே மும்பை விளையாடிய பல போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஹ்ஷ்ங்கள் எழுப்பபட்டது. மேலும் இது 3 போட்டிகளிலும் தொடர்ந்ததால் இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் தான் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிளார்க் ஹர்திக் பாண்டியாவுடன் தான் பேசியது குறித்து கூறியிருந்தார்.
அவர் கூறுகையில் “உங்கள் குழு செயல்படாதபோது இது உதவாது. நான் இங்கு வந்ததும் ஹர்திக் பாண்டியாவிடம் பேசினேன், அவர் நலமாக இருப்பதாகத் தெரிகிறது. அவர் உண்மையிலேயே நம்பிக்கையான நபர். இதை அவர் அனுமதிக்க மாட்டார். ஆனால் அவர் கிரிக்கெட்டில் இந்த அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். மும்பை ஒரு நல்ல அணி மற்றும் எப்போதும் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். ரசிகர்களுக்கு மும்பை அணி உச்சியில் இருக்க விரும்புகிறார்கள், ஆனால் தற்போது அவர்கள் கீழே உள்ளனர் என்று கிளார்க் கூறினார்.
மேலும் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய முன்னாள் இங்கிலந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் : “ஒரு வீரராக, உண்மையைச் சொல்வதென்றால், இது உங்களைத் தொந்தரவு செய்யாது. இது சர்வதேச மற்றும் உயர்மட்ட விளையாட்டின் ஒரு பகுதியாகும். உங்கள் சொந்த மைதானத்தில் இதுபோன்ற சூழலையும் விரோத உணர்வையும் நீங்கள் பெற வேண்டிய அவசியமில்லை. ஆனால் நான் விரும்பவில்லை.
இந்த சூழ்நிலை உங்களைப் பாதிக்கும் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் இன்னும் வெளியே சென்று உங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் ஒரு வெற்றிகரமான அணியாகும். அது ஒரு வெற்றிகரமான மனநிலையைக் கொண்டுள்ளது. ஆனால் அவர்கள் தற்போது வெற்றி பெறவில்லை. அதுதான் இந்த நேரத்தில் அவர்கள் சமாளிக்கும் கடினமான காரியம். அவர்கள் செய்ய வேண்டியது வெற்றியின் பாதையில் திரும்புவதுதான் என்றார் பிராட்.