அவர் திரும்ப வந்ததில் மகிழ்ச்சி.. ரிஷப் பண்ட் கூடிய விரைவில் இதை செய்யணும் – மைக்கேல் கிளார்க் விருப்பம்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்ற வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் விசாகப்பட்டினம் மைதானத்தில் பல பரீட்சை செய்தது. இதில்

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்ற வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் விசாகப்பட்டினம் மைதானத்தில் பல பரீட்சை செய்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொள்கைதான் 272 ரன்களை விளாச டெல்லி அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது.

இருந்த போதிலும் இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அற்புதமாக விளையாடி 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 55 ரன்கள் எடுத்தார். இதற்கு முன்னர் சென்னை அணிக்கு எதிராக 32 பந்துகளில் 51 ரன்களை எடுத்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

சொல்லப்போனால் கடந்த 2022 ஆண்டு டிசம்பரில் ஒரு உயிருக்கு ஆபத்தான கார் விபத்தில் அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது. அந்த காயங்களில் இருந்து மீண்டு கிரிக்கெட் நடவடிக்கைக்குத் திரும்பிய பந்தின் உறுதியை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிளார்க் பாராட்டினார். பண்ட் மூன்று தசைநார் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார், ஊன்றுகோலில் நடந்து பல மாதங்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பெற்றார். இப்போது ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தான் ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ளார் மைக்கேல் கிளார்க். அவர் கூறுகையில் “இது இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்தது, ஆனால் ரிஷப் பந்துக்கும் இது சிறந்தது. எந்த விதமான சூழ்நிலையிலும் விளையாடுவதற்கு ரிஷப் பாண்ட் தன்னை தயார் படுத்திக்கொண்ட ஒரு அற்புதமான சாதனை என்று நான் நினைக்கிறேன். அவர் தனது கடின உழைப்புக்கு மிகவும் தகுதியானவர் மற்றும் அவர் களத்தில் ஒரு கேப்டனாகவும் சிறப்பாகவும் விளையாடுவதையும், பேட்டிங் மற்றும் கீப்பிங்கையும் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அவர் கொஞ்சம் பிரச்னை இருக்கலாம் நான் பார்த்தவரையில் டெல்லி பிசியோ அவரைச் சரிபார்க்க இரண்டு முறை மைதானத்திற்கு வெளியே ஓடுவதைப் பார்த்தேன்.அவர் நன்றாக இருப்பார் என்று நம்புகிறேன், அவர் சிறப்பான பார்மில் இருப்பதாக விளக்கக்காட்சியில் நேர்மறையான அம்சங்கள் உள்ளன. ஒரு நாள் விடுமுறை அல்லது ஓரிரு நாட்கள் விடுமுறை இருந்தால் அவர் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிவிடுவார்.

அவர் ஒரு அற்புதமான வீரர், அவர் மீண்டும் களத்திற்கு வந்திருப்பதில் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அவர் டெல்லிக்காக விளையாடுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம், ஆனால் அவர் விரைவில் திரும்பி வந்து இந்தியாவுக்காக விளையாடுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்றார் கிளார்க் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை