உலக கோப்பையில் இந்தியா அச்சுறுத்தலான அணியாக இருக்கும்.. காரணம் இதுதான் – மைக்கேல் கிளார்க்
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் உலக கோப்பை டி20 தொடர் வடிவில் வர இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற உலக கோப்பைக்கு ஏற்கனவே வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பலருக்கு இந்த தேர்வு உலக கோப்பையை வெல்ல சரியாக இருக்கும் என்றும், சிலருக்கு இந்த தேர
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் உலக கோப்பை டி20 தொடர் வடிவில் வர இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற உலக கோப்பைக்கு ஏற்கனவே வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பலருக்கு இந்த தேர்வு உலக கோப்பையை வெல்ல சரியாக இருக்கும் என்றும், சிலருக்கு இந்த தேர்வு சரியாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் துவங்கி 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் மட்டுமின்றி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், 2023 ஐம்பது ஓவர் உலக கோப்பை வரை சமீப காலங்களில் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த முறை அதனை சரி செய்ய இந்திய அணி சரியான சில முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சிவம் துபே போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் போட்டி நடப்பது வெஸ்ட் இண்டீஸ் என்பதினால் அதற்கு தகுந்தாற் போல சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் இந்திய அணி குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் : ஆஸ்திரேலியாவில் இருந்து மிகவும் வித்தியாசமான சுழற்பந்து வீச்சை அதிகம் நம்பியிருக்கும். ஆனால் இந்தியா தேர்ந்தெடுத்த அணியில் ரிஸ்க் எடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் நான் கரீபியனில் விளையாடிய சூழ்நிலையில் இருந்து பார்க்கையில் நீங்கள் எப்படி ஸ்பின் விளையாடுகிறீர்கள் என்பது நீங்கள் வெற்றிபெறுகிறதா இல்லையா என்பதில் பெரும் பங்காக இருக்கும் என்று நினைக்கிறேன்.
உலகக் கோப்பையை வெல்லப் போவது யார் என்பதில் இந்தியாதான் எனக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. உலகக் கோப்பையில் சாதகமான அணியாக பார்த்தால் இந்தியாவாக இருக்க வேண்டும், அவர்களின் அணி தயாரிப்பு சிறப்பாக உள்ளது. வெஸ்ட் இன்டீஸை ஒப்பிடும் போது இந்தியாவில் நிலைமைகள் வேறுபட்டவை, ஆனால் நிறைய ஒற்றுமைகளும் உள்ளன. எனவே வீரர்களுக்கு அது பழகி விட்டது என்றார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்.