இது போன்ற ஒரு கேடு கேட்ட அமைப்பை நான் பார்த்தது கிடையாது. உஸ்மான் க்வாஜா விஷயத்தில் ICC யை கடுமையாக சாடிய மைக்கல் ஹோல்டிங்.
ஐசிசி போன்ற ஒரு கேவலமான அமைப்பை நான் பார்த்தது இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஐசிசியை சாடியுள்ளார். அதற்க்கான காரணம் என்வென்று பார்த்தால் உஸ்மான் க்வாஜா அவரது ஷூவில் வாக்கியங்களையும் சில குறியீடுகளையும் அவர் அணிந்து இருந்தார். இதை பார்த்த icc அதை மாற்ற வேண்டும் என்று கூறிய
ஐசிசி போன்ற ஒரு கேவலமான அமைப்பை நான் பார்த்தது இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஐசிசியை சாடியுள்ளார். அதற்க்கான காரணம் என்வென்று பார்த்தால் உஸ்மான் க்வாஜா அவரது ஷூவில் வாக்கியங்களையும் சில குறியீடுகளையும் அவர் அணிந்து இருந்தார். இதை பார்த்த icc அதை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்க்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஐசிசியை கடுமையாக சாடியிருந்தார்.
பல மாதங்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. அதில் பல அப்பாவி மக்கள் இரண்டு பக்கமும் உயிரிழந்து உள்ளனர். அதற்காக அனைத்து உயிர்களும் சமம் என்றும் பலஸ்தீன கோடி வண்ணத்தில் அவர் அவரது ஷூவில் ஒரு வசனத்தை எழுதி இருந்தார். இதனை பார்த்த ICC அவர் அந்த ஷூ அணிந்து போட்டியில் பங்கேற்க ஐ.சி.சி தடை விதித்த நிலையில், கையில் கருப்பு பட்டை அணிந்தபடி முதல் டெஸ்டில் பங்கேற்ற கவாஜா, ஐ.சி.சி.க்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைதி புறா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டையும், ஷூவையும் பயன்படுத்த அவர் அனுமதி கோரி இருந்த நிலையில், அனுமதி வழங்க ஐ.சி.சி. மறுத்து இருந்தது. இதனை கண்ட மேற்கிந்திய அணியின் முன்னாள் வீரர் மைக்கல் ஹோல்டிங் ICCயின் நடவடிக்கைகள் அதிர்ச்சியையும் ஆச்சிரயத்தையும் அளிக்கின்றது. இது போன்று வேறு எதாவது விளையாட்டு அமைப்பு இருந்து இருந்தால் அனைத்திற்க்கும் ஒரு மாதிரியாக குரல் கொடுத்து இருப்பார்கள்.
ஐசிசியை பொறுத்தவரை நிறவெறி, மதம் மற்றும் அரசியல் சார்ந்த எந்த ஒரு விஷயத்திற்கும் அனுமதி அளிக்காது. அது போன்ற விதி இருக்கும் போது கறுப்பின மக்களுக்காக ஆதரவு தரும் வகையில் இயக்கத்தை நடத்தியது ஏன்? அதே போல் ஓர் இன சேர்க்கைக்காக ஸ்டம்பின் நிறத்தை வானவில் கலரில் மாற்றியது ஏன்? மக்களுக்காக குரல் கொடுக்கும் இது க்வாஜா விஷயத்திற்கு தடை போடுவதில் எதாவது நியாம் இருக்கின்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான உஸ்மான் கவாஜாவின் பேட்டில் தனிப்பட்ட செய்தி சின்னம் வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசி பரிசீலித்த பிறகு, விண்ணப்பத்தை ஏற்கவில்லை என்றும் ஐசிசி செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.அறிக்கைகளின்படி, ஐசிசியின் மறுப்புக்கு முன்னதாகவே லோகோவைக் காண்பிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஆகிய இருவரிடமும் கவாஜா அனுமதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.