தோனி நல்ல டிராமா பண்ணுவாரு.. இன்னும் சில வருடங்கள் விளையாடுவாருனு நினைக்கிறேன் – மைக்கேல் ஹசி பேட்டி.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி. மேலும் இந்திய கேப்டன்களில் மூன்று உலக கோப்பைக

By ·

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி. மேலும் இந்திய கேப்டன்களில் மூன்று உலக கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்றால் அது எம்.எஸ் தோனி தான். இந்நிலையில் தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

இருந்த போதிலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணைக்க தொடர்ந்து விளையாடிவரும் தோனி கடந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று கொடுத்து அடுத்த ஆண்டும் ரசிகர்களுக்காக விளையாட போவதாக கூறியிருந்தார். ஆனால் இத ஆண்டு கொஞ்சம் தோனி தாமதமாக களமிறங்குகிறார். இதனால் இந்த சீசன் தான் கடைசியான சீசனாக இருக்குமோ என்று ரசிகர்கள் பாலரும் சோகத்தில் உள்ளனர்.

இருந்த போதிலும் தோனி இனமும் அதிக்ராரப்பூர்வமாக சென்னை அணியில் இருந்து ஓய்வு பெற போவதாக தெரிவிக்கவில்லை. மேலும் தோனியின் நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னா கூட சமீபத்திய பேட்டியில் தோனி ஓய்வு பெற மாட்டார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் சென்னை அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தோனி ஓய்வு குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது :தோனி கடந்த சீசனில் நடந்த அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் அவர் தொடரின் தொடக்கத்தில் இருந்து அதனை பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் முதல் ஆளாக முகாமிற்குள் வருகிறார். மேலும் இன்னும் நன்றாக பேட்டிங் செய்கிறார். அவர் அனைத்து சீசன்களிலும் சிறப்பான டெச்சில் இருந்தார். போட்டியின் ஆரம்ப கட்டத்தில் இருந்து.

தனிப்பட்ட பார்வையில், அவர் இன்னும் இரண்டு வருடங்கள் தொடருவார் என்று நம்புகிறேன். ஆனால் நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவர் மட்டுமே அவர் ஓய்வு பெறுவாரா இல்லையா என்ற முடிவை எடுப்பார். மேலும் அவர் நாடகத்தை உருவாக்க விரும்புகிறார். எனவே நான் எந்த நேரத்திலும் ஒரு முடிவை எதிர்பார்க்க மாட்டேன் என்றார் மைக்கேல் ஹசி.

மேலும் பேசிய அவர் கூறுகையில் : அவர் முன்னதாக களமிறங்கி அதிகமாக பேட்டிங் செய்வதைப் பார்க்க ரசிகர்கள் விரும்புவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக நாங்கள் அவரைக் கொஞ்சம் நிர்வகிக்க வேண்டியிருந்தது. இதனால் தான் அவர் கொஞ்சம் பின்னல் வருகிறார். இருந்த போதிலும் அவரை போல கடைசி ஓவரில் கட்சிதமாக அடிக்க கூடியவர் யாரும் இல்லை. அவர் அதில் அற்புதமானவர் என்றார் மைக்கேல் ஹசி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை