வார்னர் மற்றும் ஸ்மித் ஓய்வு பெற போகிறார்களா? பரபரப்பை ஏற்படுத்திய மைக்கேல் வாகன் பேச்சு.

கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பவுமிக்க தொடர்களில் ஒன்றான ஆஷஸ் தொடர்நது தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் போட்டியில் ஆஸ்திரேலியா போராடி வென்ற நிலையில் மூன்றவது போட்டியில் வெற்றியடைந்தே ஆகவேண்டும் விளையாடிய இங்கிலாந்து போராடி வெற்றி பெற்றது. இதனால் இங்

By ·

கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பவுமிக்க தொடர்களில் ஒன்றான ஆஷஸ் தொடர்நது தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் போட்டியில் ஆஸ்திரேலியா போராடி வென்ற நிலையில் மூன்றவது போட்டியில் வெற்றியடைந்தே ஆகவேண்டும் விளையாடிய இங்கிலாந்து போராடி வெற்றி பெற்றது. இதனால் இங்கிலாந்து அணிக்கு அடுத்த போட்டியில் போராட ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் 4 வது போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அற்புதமாக விளையாடிய இங்கிலாந்து 592 ரன்களை எடுத்தது. மேலும் ஆஸ்திரேலியாவிற்கு இரண்டாவது இன்னிங்கில் அவர்கள் எடுத்த ரன்களை தண்டுவதற்க்கு முன்னரே பல விக்கெட்டுகள் விழுந்தது. அப்படிப்பட்ட நிலையில் தான் 4 மற்றும் 5வது நாள் போட்டியில் மழை காரணமாக போட்டியானது நிறுத்தப்பட நிலையில் டிரா ஆனாது.

மைக்கேல் வாகன் கொடுத்த அதிர்ச்சி :

இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன ஒரு அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியதாவது “ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இந்த வருட ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற இருப்பதாக தனக்கு சில தகவல்கள் கிடைத்தாக தெரிவித்துள்ளார். இது உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சையான விஷயம் குறித்த செய்தி மேலும் பேசிய வர கூறுகையில் “செய்தியாளர்களுக்கு மழை காலத்தில் கொஞ்சம் போர் அடிக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறிய அவர் தான இந்த தகவலை செய்தியாளர்களின் அறையில் இருந்து பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் “அவர்களுக்கு எங்கே இருந்து இது போன்ற தகவல்கள் கிடைக்கிறது என்று தெரியவில்லை.

ஆனால் அவர்கள் டேவிட் வார்னர் மற்றும்சடீவ் ஸ்மித் இருவரும் ஓய்வு பெற போவதாக முணுமுணுத்ததை தான் கேட்டதாகவும், இவை வத்நந்திகளாக இருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் ஸ்மித் மற்றும் வார்னர் பற்றி பேசிய அவர் கூறுகையில் ” டேவிட் வார்னர் தன்னுடைய கிரிக்கெட்டில் கடைசி போட்டியை சிட்னி மைத்தனத்தில் விளையாட விருப்பம் தெரிவித்தார்.

கணிப்பு :

மேலும் ஸ்மித் பற்றி பேசிய மைக்கேல் வாகன் “ஸ்டீவ் ஸ்மித் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்மேனாக இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் அவர் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளார் எனவே அவர் இன்னமும் இரண்டு மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என்று தான் நினைப்பதாக கூறினார் மைக்கேல் வாகன. இந்நிலையில் 5வது போட்டியானது வரும் 27ஆம் தேதி ஓவல் மைத்தனத்தில் நடக்க இருப்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை