இவ்வளவு பயத்துடன் விளையாடுவதை பார்த்ததில்லை’ – ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை விமர்சித்த மைக்கேல் வாகன்.
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் அடுத்த 3 வது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் டா
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் அடுத்த 3 வது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை முடிவு செய்தது. இந்நிலையில் பொறுமையாக விளையாடிய இங்கிலாந்து 54.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்களை எடுத்தது
இந்த போட்டியில் அஸ்திரேலியா ரன்களை எடுக்க வழக்கமான நேரத்தை விடமும் அதிகமான நேரம் எடுத்துக்கொண்டனர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இங்கிலாந்து அணி 54,4 ஓவர்களில் 283 ரன்களை அடிக்க ஆஸ்திரேலியா 103.1 ஓவர்களில் தான் 295 ரன்களை அடித்தது, மேலும் உஸ்மான் கவாஜா 157 பந்துகளை எதிர்கொண்டு 47 ரன்களை அடித்தார். அதே போன்று மரன்ஸ் 82 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தான் முன்னாள் இங்கிலாந்து அணியின் வீரரான மைக்கேல் வாகன் இங்கிலந்து அணியை விமர்சித்து பேசினார். அவர் கூறுகையில் “அவர்கள் கலசத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியா இவ்வளவு பயத்துடன் விளையாடுவதை நான் பார்த்ததில்லை என்று வெளிப்படையாக கூறினார். அவர்கள் பொதுவாக மிகவும் ஆக்ரோஷமானவர்கள் மற்றும் விளையாட்டை விளையாடி ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சி செய்வார்கள்.
ஆனால் இந்த முறை பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளாமல் அவர்கள் நீண்ட நேரம் பேட்டிங் செய்தார்கள். இன்று காலை நான் பார்த்த ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கைப் பார்த்ததிலேயே மிக மோசமானது என்று நினைத்தேன். அவர்கள் இதற்கு முன்னர் அப்படி விளையாடவே இல்லை என்றார் மைக்கேல் வாகன்.
மேலும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் வோகன் பேசுகையில் இங்கிலாந்து நன்றாகப் பந்துவீசியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எதிரணியினர் உங்களை தோற்கடிக்க எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ அந்த அளவிற்கு, நீங்கள் அவர்களை தேற்கடிக்க விரும்புகிறீர்கள் என்பதை அவர்களுக்கு சொல்ல வேண்டும் என்றார் மைக்கேல் வாகன்.
மேலும் பேசிய அவர் தான் ஒரு நிமிடம் கூட பேஸ்பாலைப் பொருத்த முயற்சி செய்யுங்கள் என்று நான் பரிந்துரைக்கவில்லை. ஆனால் இன்னும் கொஞ்சம் முனைப்புடன் இருக்க வேண்டும் என்றார். இந்நிலையில் ஆஸ்திரேலியா நேற்று நாள் முடிவில் ஆல் அவுட் ஆனா நிலையில் இன்று இங்கிலாந்து களமிறங்க போகிறது. ஒருவேளை அதிரடியாக விளையாடி 400 ரன்களை இங்கிலந்து எடுக்கும் பட்சத்தில் டக்ளர் கொடுத்து இந்த போட்டியில் வெல்ல முயற்சி செய்யும்.