சென்னையிலும் உங்களுக்கு இந்த நிலைமையா? பாகிஸ்தானை கலாய்த்த மைக்கல் வாகன்

உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அணி என்றால் பாகிஸ்தான் அணியை கூறலாம்.ஏனென்றால் பாகிஸ்தான் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நம்பர் 1 அணியாக இருந்து வந்தது. மேலும் அவர்களின் கேப்டன் பாபர் அசாமும்

By ·

உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அணி என்றால் பாகிஸ்தான் அணியை கூறலாம்.ஏனென்றால் பாகிஸ்தான் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நம்பர் 1 அணியாக இருந்து வந்தது. மேலும் அவர்களின் கேப்டன் பாபர் அசாமும் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்து வந்தார். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டிக்கு பிறகு அனைத்துமே மாறியது.

அது உலக கோப்பை தொடரிலும் தொடர்ந்தது, ஏனெனில் 5 போட்டிகளை விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3 போட்டிளில் தோல்வியுயை தழுவியுள்ளது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது, இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து பல குற்றசாட்டுகள் எழுந்தன. குறிப்பாக இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா அசத்திய தருணங்களில் “சக்தே இந்தியா” உத்வேக பாடல் ஒலிபரப்பப்பட்டது போல் பாகிஸ்தான் அசத்திய தருணங்களில் “தில்தில் பாகிஸ்தான்” பாடல் ஒளிபரப்பப்படவில்லை என்று அந்த அணியின் இயக்குனர் மிக்கி ஆர்த்தர் விமர்சித்தார். மேலும் இந்த போட்டியானது ஐசிசி நடத்துவது போல இல்லை என்றும் பிசிசிஐ நடத்தும் தொடரை போல இருக்கிறது எண்டுற விமர்சனம் செய்தார்.

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணிக்கு மீதம் இருக்கும் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு இவை அனைத்திற்கும் ஃபைனலில் வந்து இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் அவர் எச்சரித்திருந்தார். ஆனால் அதன் பின்பும் சுமாராக செயல்பட்டு மொத்தம் 3 தோல்வியை பதிவு செய்துள்ளதால் பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெறுவது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் தான் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியானது தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு மைதானம் ஒரு காரணம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் கூறிவரும் நிலையில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியை விமர்சித்து பேசியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன்.

அவர் போட்டிருந்த ட்விட்டர் பதிவில் “சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் “தில்தில் பாகிஸ்தான்” பாடல் ஒலிபரப்பபடாததே பாகிஸ்தானின் தோல்விக்கு காரணம் என்று கருதுகிறேன் கலாய்த்து பதிவிருந்தார். சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சும் பில்டிங்கும் மோசமாக இருக்கும் நிலையில் இந்த பதிவானது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ஆகி வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை