விராட் கோலியை சுயநலவாதி என கூறிய ஹபீஸ். ஹபீஸை கடுமையாக விமர்சித்த மைக்கல் வாகன்.

கோலியின் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் சதம் குறித்து இரண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மைக்கல் வாகன் மற்றும் ஹபீஸ் இடையே மோதலில் ஈடு பட்டு உள்ளனர். 26 பந்துகளில் தனது கடைசி 26 ரன்களை எடுத்ததன் மூலம், தனது 49வது ஒருநாள் சதமாக அமைந்த விராட் கோலியின் இன்னிங்ஸை "சுயநலம்"

By ·

கோலியின் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் சதம் குறித்து இரண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மைக்கல் வாகன் மற்றும் ஹபீஸ் இடையே மோதலில் ஈடு பட்டு உள்ளனர். 26 பந்துகளில் தனது கடைசி 26 ரன்களை எடுத்ததன் மூலம், தனது 49வது ஒருநாள் சதமாக அமைந்த விராட் கோலியின் இன்னிங்ஸை “சுயநலம்” என்று குறிப்பிட்டு முகமது ஹபீஸ் கடந்த நான்கு நாட்களாக தனது சமூக ஊடக அறிவிப்புகளை பகிர்ந்து உள்ளனர்.

இது கடினமான ஆடுகளம் மற்றும் வலுவான பந்துவீச்சு தாக்குதல் என்ற உண்மையைப் புரிந்து இந்திய அணி நீண்ட நேரம் பொறுமையாக விளையாடியது.கொல்கத்தாவில் கோலியின் சதத்தைப் பற்றி ஹபீஸ் கூறுகையில் “விராட் கோலியின் பேட்டிங்கில் நான் சுயநல உணர்வைக் கண்டேன், இது இந்த உலகக் கோப்பையில் மூன்றாவது முறையாக நடந்தது.” என்றும் அவர் கூறினார்.

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கோலியை “சுயநலவாதி” என்று முத்திரை குத்தியதற்காக ஹபீஸைப் விமர்சித்தால் இந்திய ரசிகர்களின் பாராட்டுகளையும் ஆதரவையும் பெற்றார். விராட் கோலி ஹபீஸை வெளியேற்றியதை மைக்கேல் வாகன் வேடிக்கையாக சுட்டிக்காட்டி பதிவு ஒன்றை அளித்து இருந்தார்.

புதன்கிழமை மாலை, மைக்கேல் வாகன், 2012 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி ஹபீஸை வெளியேற்றினார் – க்ளீன் பவுல்டு செய்தார் – அதனால் தான் ஹபீஸ் கோலியை குறிவைக்கிறார் என்று கூறினார். ரசிகர்களின் அதிருப்தி ஹபீஸைத் தடுக்கவில்லை. நெதர்லாந்திற்கு எதிராக பென் ஸ்டோக்ஸின் சதத்தை பாராட்டிய போது, ​​ஸ்டோக்ஸின் சதம் “சுயநலம் மற்றும் தன்னலமற்ற அணுகுமுறையை வேறுபடுத்துவதற்கான எடுத்துக்காட்டு” என்று ஹபீஸ் ட்வீட் செய்தார்.

இதற்கு மைக்கேல் வாகனிடமிருந்து மற்றொரு பதில் கிடைத்தது. 2005 ஆம் ஆண்டு ஆஷஸ் வென்ற கேப்டன், நெதர்லாந்திற்கு எதிராக புனேவில் ஸ்டோக்ஸ் எதிர்கொண்டதை விட, மிகவும் வலுவான பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக கோலியின் சதம் மிகவும் கடினமான ஆடுகளத்தில் வந்தது என்று எடுத்துரைத்தார். அதற்க்கு மைக்கல் வாகனுக்குஇந்திய ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை