இது நியாயமற்றது.. வீரர்கள் கடுமையாக முயற்சி செய்தனர் – பாக் பயிற்சியாலர் பேட்டி
தற்போது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 26ஆவது போட்டியாக தென்னாப்பிரிக்கா அணியும் பாகிஸ்தான் அணியும் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியை இந்த மைதானத
தற்போது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 26ஆவது போட்டியாக தென்னாப்பிரிக்கா அணியும் பாகிஸ்தான் அணியும் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியை இந்த மைதானத்தில் நடைபெறும் கடைசி இந்த உலகக் கோப்பை போட்டியாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. 46.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளின் இழந்து 270 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணியின் அதிகபட்சமாக ஷகீல் 52 ரண்களும் கேப்டன் பாபர் அசாம் 50 ரன்ளும் சாதாப் கான் 43 ரன்களையும் குவித்தனர்.
தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஷம்சி நான்கு விக்கெட்டுகளையும் ஜான்சன் மூன்று விக்கெட்டுகளையும் கோட்ஸி இரண்டு விக்கெட்டுகளையும் லுங்கி இங்கிடி ஒரு விக்கெட்டையும் விழித்திருந்தார். 271 ரன்கள் என்ற இலக்கை கொண்டு களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பத்தில் நன்றாக தொடக்கம் கிடைத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட தென்னாப்பிரிக்க அணி ஓவர்களில் விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு இன்னமும் சில போட்டிகள் இருப்பதினால் அரையிறுதி செல்வதற்கு இன்னமும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் வரும் அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் வென்றால் மட்டுமே அதுநடக்கும் அதே நேரம் பாகிஸ்தானுக்கு முன்னாள் இருக்கும் அணிகளும் தோல்வியை தழுவினால் மட்டுமே அதுவும் கூட சாத்தியம் என்பதினால் அதிர்ஷ்டம் பாகிஸ்தான் அணிக்கு தேவைப்படுகிறது
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பிறகு பேசிய பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில் “எல்லோரையும் குற்றம் சாட்டப் போகிறார்கள், இது உலகத்தின் வழி. பாபர் ஆசாம் மீதும் தலைமை தேர்வாளர், இன்சமாம்-உல்-ஹக் பயிற்சியாளர்கள் மீது, நிர்வாகக் குழுவில் உடனடியாக வேட்டையைத் தொடங்குவது உண்மையில் நியாயமற்றது. எனக்கு தெரிந்த விஷயம் என்னவென்றால் வீரர்கள் முயற்சி மற்றும் பயிற்சி முதல் தரம் வாய்ந்ததாக இருந்தது. வீரர்கள் எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்பது பார்த்தால் ஆச்சரியப்படுவார்கள்.
இன்றிரவு, போட்டியின் எங்கள் சிறந்த பந்துவீச்சு செயல்திறன் என்று நான் நினைத்தேன். நாங்கள் நன்றாகப் பந்துவீசினோம் என்று நினைத்தேன், ஆனால் நாங்கள் பெற்ற ரன்களின் அடிப்படையில் கொஞ்சம் கடினமாக இருந்தது. நாங்கள் இன்னும் சரியான ஆட்டத்தை ஒன்றாக இணைக்கவில்லை. இது முயற்சியின் பற்றாக்குறையால் அல்ல, முயற்சியின் பற்றாக்குறையால் அல்ல, போதுமான வீரர்கள் குறிப்பாக பேட் மூலம் செயல்திறனை காட்டவில்லை என்றார் மிக்கி ஆர்தர்.