இந்த போட்டி ICC நடத்தியது போல் இல்லை. இவர்கள் நடத்தியது போல இருந்தது. நேற்றைய போட்டியை விமர்சித்த பாக்.அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர்.
உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர்.
உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.
இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.
பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி தலா 6 பவுண்டரி சிக்சருடன் 86 (63) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார்.
30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் அனைவரும் வந்தே மாத்திரம் பாடியது மெய் சிலிர்க்க வைத்தது.
மிக்கி ஆர்தர் கூறுகையில்:
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் அவரை நோக்கி ”ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டுள்ளனர். போட்டி நடைபெறும் போது ”ஜெய் ஸ்ரீராம்” என முழங்கும் பாடல்களும் மைதானத்தில் ஒலிக்கப்பட்டுள்ளன. அதே போல ஐசிசி நடத்திய போட்டியை போல் தெரியவில்லை என்பதே உண்மையாகும். மாறாக அது பிசிசிஐ நடத்திய இருதரப்பு தொடரை போல் இருந்தது அதே போல் பாகிஸ்தான்னுக்கு ஆதரவாக எந்த ஒரு கோஷமும் அங்கு கேட்க வில்லை. நான் இதை காரணமாக கூறவில்லை இந்திய அணி சிறப்பாக செயல் பட்டனர். என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் கூறி இருந்தார்