“4 சீசனில் 3 முறை பிளே ஆஃப் சென்றோம்” ஏமாற்றமாக இருக்கிறது – RCB அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மைக் ஹெசன்.

ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமையான அணிகளில் ஓன்று ஆர்சிபி. இதில் கிறிஸ் கெய்ல், விராட் கோலிம், ஏ பி டி, தினேஷ் கார்த்திக் போன்ற பல திறமையான வீரர்கள் இருந்தும் இந்த அணியினால் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட வெல்ல முடியவில்லை. அதுவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் செய்த விராட் க

By ·

ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமையான அணிகளில் ஓன்று ஆர்சிபி. இதில் கிறிஸ் கெய்ல், விராட் கோலிம், ஏ பி டி, தினேஷ் கார்த்திக் போன்ற பல திறமையான வீரர்கள் இருந்தும் இந்த அணியினால் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட வெல்ல முடியவில்லை. அதுவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் செய்த விராட் கோலி கேப்டனாக ஆர்சிபி அணிக்கு பல காலம் இருந்து வெற்றி என்பது இனமும் ஆர்சிபி ரசிகர்களுக்கு கனவாகத்தான் இருந்தது வருகிறது.

இந்நிலையில் ஆர் சிபி அணி நிர்வாக பல மாற்றங்களை செய்து விட்டாது, குறிப்பாக பல் ஆண்டுகாலம் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியை இந்த வருடம் நீக்கியது ஆனாலும் வெல்ல முடியவில்லை, பல முக்கிய வீரர்களை ஐபிஎல் ஏலத்தில் இருந்து எடுத்தது ஆனாலும் வெற்றிபெறமுடியவில்லை. இப்படி பல மாற்றங்களை செய்துவரும் ஆர்சிபி நிர்வாகம் தற்போது அந்த அணியின் பயிற்சிலையாளரையே மாற்றியுள்ளது.

அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மைக் ஹெசன் ஆரிசிபி அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார், மேலும் அணியும் மூன்று முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியும் தோல்வியை தழுவியது. ஆனால் இந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கே முன்னேறமுடியாத நிலையில் தான் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹெசனை நீக்கிவிட்டு லக்னோ அணியில் பயிற்சியாளராக இருந்த ஆண்டி பிளவர் அவர்களை தலைமை பயிற்சியாளராக கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில் அணியில் இருந்து வெளியேறிய மைக் ஹெசன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில் எங்களால் கடந்த 4 சீசன்களில் 3 முறை ப்ளே ஆஃப் சுற்றுகளுக்கு செல்ல முடிந்து அணியில் நல்ல முன்னேற்றம் காண முடிந்தாலும், எங்களால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை.எனக்கு அங்குள்ள பல வீரர்களையும், நிர்வாகமும், அற்புதமான ரசிங்கர்களும் மிகவும் பிடித்தது. ஆர்சிபியை விட்டு வெளியேறுவதில் ஏமாற்றம் அடைந்தாலும், ஆர்சிபி அணியின் உள்ளேயும் வெளியேயும் சிறந்த மனிதர்களுடன் பணிபுரிந்த சில இனிமையான நினைவுகள் எனக்கு உள்ளன.

View this post on Instagram

A post shared by Mike Hesson (@hesson_mike)

அந்த நினைவுகளை அனுபவித்த எனக்கு அந்த வாய்ப்பை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் மற்றும் RCB மற்றும் அதன் புதிய பயிற்சி குழு மிகவும் தலைவர் சிறப்பாக செயல்பாட என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கடைசியாக ஆச்சரியமான RCB ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் அணிக்கான தந்த உங்களுடைய ஆதரவும் ஆர்வமமும் மிகப்பெரியது. நான் எனது வீட்டில் இருப்பது போல உணர வைத்தீர்கள், அதற்காக நான் உங்களுக்கு நன்றி என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் மைக் ஹெசன்.

குறிப்பிடத்தக்க வகையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆறு வருடங்கள் பணியாற்றியபோது ஹெசனின் சாதனைகளில் ஒன்றாகும். பிளாக் கேப்ஸின் நீண்ட கால கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்தவர் என்ற பெருமையும் இவரை சாரும். அவரது பயிற்சியாளராக இருந்த போது அணியை அனைத்து வடிவங்களிலும் 13-போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்தார்.மேலும் உள்நாட்டு போட்டிகளில் கிடைக்கும் வெற்றியை சர்வதேச வெற்றியாக மாற்றும் அவரது திறமை மிகவும் பாராட்டப்பட்டது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை