வீடியோ : மோசமான சாதனை படைத்த லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் – அமெரிக்காவிலும் அதிரடி காட்டிய பொல்லார்ட்.

கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும்

By ·

கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் லீக் போட்டிகளை நடத்தி கிரிக்கெட்டை வளர்த்து வருகிறார். அந்த வகையில் தான் அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் போட்டியானது நடந்து வருகிறது.

இந்த போட்டியானது சில நாட்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. 6 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மொத்தமாக 15 போட்டிகள் மட்டுமே நடக்க இருக்கிறது. இந்த ஆறு அணிகளில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய அணிகளும் மீதம் 2 அணிகளை அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களும் வாங்கியுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தான் இன்று காலை இந்திய நேரப்படி டெக்சாஸ் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது நடைபெற்றது.

இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணிக்கு மும்பை இன்டனியஸின் பயிற்சியாளரான பொல்லார்டு கேப்டனாக இருக்கிறார். இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த கும்பி அணியின் தொடக்க வீரர்கள் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சொற்ப ரன்களால் வெளியேறினார்கள். அடுத்து வந்தவர்களும் அப்படியே வெளியேற பூரான் மற்றும் டிம் டேட்டிவ் நிலைத்து நின்று விளையாடினார்கள்.

இதில் பூரான் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் பொல்லார்ட் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இப்படி ஒரு பக்கம் விக்கெட்டுகள் வந்தாலும் அதிரடியாக டிம் டேவிட் விளையாடிய டிம் டேவிட் 21 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்திருந்தது.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் தொடக்கமே அதிர்ச்சியாக மார்ட்டின் குப்டில் டக் அவுட்டாக்கினார். அதற்கு பிறகு வந்த அணைத்து பேட்ஸ்மேன்களுமே 7 ரன்களுக்கு மேலே தாண்டவில்லை. உன்முக்த் சந்த் மட்டுமே 26 பந்துகளுக்கு 26 ரன்களை விளாசினார். இறுதியில் 13.5 ஓவர்களிலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்வியை தழுவியது.

இது பலருக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஒன்றாக இருந்தது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் கடந்த 2017ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபிக்கு எதிராக நடந்த போட்டியில் ஆர்சிபி 49 ரன்களுக்கு ஆல் அவுட்டானத்தே குறைந்த பட்ச்ச ரன்னாக இருந்த நிலையில் அந்த மோசமான சாதனையை லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது ஒரு ரன்னில் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் தவறவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை