இது சேப்பாக்க ஸ்டேடியும்.. சொல்லவா வேணும் – வெற்றிக்கு பிறகு சான்ட்னர் பேச்சு.
உலக கோப்பை 2023 போட்டியானது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் தொடர்ந்து வெற்றியில் இருக்கும் நியுசிலாந்து அணியுடன் அப்கானிஸ்தான் அணி மோதியது. உலகக்கோப்பை பதினாறாவது போட்டியில் நியூசிலாந்து அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணி சென்னையில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மோதியது. அதில் டா
உலக கோப்பை 2023 போட்டியானது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் தொடர்ந்து வெற்றியில் இருக்கும் நியுசிலாந்து அணியுடன் அப்கானிஸ்தான் அணி மோதியது. உலகக்கோப்பை பதினாறாவது போட்டியில் நியூசிலாந்து அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணி சென்னையில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மோதியது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய விரும்பியது ஆனால் அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. நியூசிலாந்து அணியிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்தது 288 ரண்களை எடுத்தது.
289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களம் இறங்கி ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் இருந்த சொதப்பி வந்தது 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 139 ரகளை மட்டுமே எடுத்து இசொதப்பியது. இதனால் நியூசிலாந்து அணி நான்காவது வெற்றியை பதிவு செய்த்தது. இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்த சான்ட்னர் சென்னை மைதானம் குறித்து பேசியிருந்தார்.
அவர் கூறுகையில் ” நாங்கள் ஐபிஎல் போட்டியில் இங்கு விளையாடும் போது இதே மாதிரியான விக்கெட்டுகளில் விளையாடியிருக்கிறோம் என்று நான் நினைக்கிறன். இந்த மைதானத்தில் விக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சுழன்றது போலவும் இராண்டாம் பகுதியில் விளக்குகளின் கீழ் இன்னும் கொஞ்சம் பந்து சுழன்றது போலவும் தோன்றியது. அந்த விஷயம் நாங்கள் டாஸ் இழந்து முதலில் பேட் செய்ய உதவியது. சென்னை எனக்கு இன்னொரு வீடு போன்றது.
100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவது வெளிப்படையாக மகிழ்ச்சி அளிக்கிறது, நான் அதை பற்றி அதிகம் சிந்திக்கவில்லை என்று நினைக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் டேனியல் வெட்டரி சாதனையை முறியடிப்பதற்கு நான் 200 விக்கெட்டுகளுக்கு மேலே எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார் சான்டனர்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “இந்த மைதானத்தில் பந்து சிறிது சுழலுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்தமாக, நாங்கள் பார்ட்னர்ஷிப்பில் பந்துவீசுகிறோம், அதை பற்றித்தான் நாங்கள் இன்று பேசுகிறோம். இன்று முன்னணியில் இருக்கும் போல்ட் மற்றும் மாட் ஹென்றி அற்புதமாக பந்துவீசி அழுத்தம் கொடுத்து ரன் ரேட்டை உயர்த்துவதில் சிறப்பாக செயல்பட்டனர்.
இதனால் அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன்கள் மிடில் ஓவர்க பெரிய ஷாட்களை ஆட வேண்டிய நிலை ஏற்படுவதனால் அப்போது எங்களுக்கு விக்கெட்டுகள் விழுகிறது என்றார் சான்டனர். இந்நிலையில் இந்த தொடரில் 4 தொடர் வெற்றிகளை பெற்ற நியூசிலாந்து அணி தற்போது 8 பபுள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கிறது. அடுத்ததாக வரும் 22ஆம் தேதி இந்தியாவுடன் மோத இருப்பது குறிப்பிடதக்கது.