“பெரிய தவறு” ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடாதது குறித்து நெட்டிசன்களின் ரியாக்சன்.
சமீபத்தில் டெஸ்ட் சாம்பியன் உலகக்கோப்பை போட்டியானது நிறைவடைந்த நிலையில் தான் உலக் கிரிக்கெட் ரசிகர்களின் கண்கள் முழுவதும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் இருக்கிறது. இந்த காலாகாலமாக ஆஸ்திரலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இதில் இங்கிலாந்து 32 முறையும், ஆஸ்திரேலியா
சமீபத்தில் டெஸ்ட் சாம்பியன் உலகக்கோப்பை போட்டியானது நிறைவடைந்த நிலையில் தான் உலக் கிரிக்கெட் ரசிகர்களின் கண்கள் முழுவதும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் இருக்கிறது. இந்த காலாகாலமாக ஆஸ்திரலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இதில் இங்கிலாந்து 32 முறையும், ஆஸ்திரேலியா 34 முறையில் வென்றி பெற்றுள்ளது. அதோடு 6 முறை போட்டி சமன் செய்யப்படும் உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த வருடம் ஆஷஸ் தொடரானது இன்று முதல் தொடங்கியுள்ளது. தற்போது எந்த பெரிய போட்டிகளும் இல்லாததினால் ரசிகர்களின் பார்வை முழுவதும் ஆஷஸ் பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில் தான் போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஆஸ்திரேலியா அணியில் செய்யப்பட்டுள்ள ஒரு மற்றம் குறித்து சோசியல் மீடியாவில் விவாதங்கள் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு இதுவரை மிட்செல் ஸ்டார்க் நல்ல ஃபார்மில் இருந்ததால், ஸ்காட் போலண்ட் மற்றும் ஹேசில்வுட் இடையே மூன்றாவது இடத்தைப் பிடித்து அணியில் உறுதியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டதால், அவரின் மீது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்தியாவுக்கு எதிரான WTC இறுதிப் போட்டியில் கம்மின்ஸுடன் இணைந்து சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் இன்று தொடங்கிய ஆஷஸ் தொடரில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்வது என்று முடிவு செய்தது.
இந்நிலையில் டாஸை இழந்து முதலில் பந்துவீச அழைக்கப்பட்ட பாட் கம்மின்ஸ் வர்ணனையாளரிடம் பேசும் போது ஆஸ்திரேலியாவின் கலவையைப் பற்றி பேசினார். ஆஸ்திரேலியாவில் மூன்று சரியான வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோருடன் களமிறங்குவார் என்று செய்தி வெளியிட்டார். ஆனால் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய மிட்செல் ஸ்டார்க் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் “அணியில் ஒரு மாற்றம், மிட்ச் ஸ்டார்க் வெளியே செல்கிறார், ஹேசில்வுட் உள்ளே வருகிறார். கடினமான முடிவுதான். மிட்செல் ஸ்டார்க் கடைசி ஆட்டம் நன்றாக இருந்தது ஆனால் ஹேசில்வுட் போன்ற ஒருவர் உள்ளே வருவது அணிக்கு நல்லது. ஏனென்றால் பணிச்சுமையை நிர்வகிப்பது கடினம், வாரந்தோறும் எங்களுடைய விஷியங்களை மதிப்பிடுவோம். ஆனால் இது நல்ல பிரச்னைதான் என்று கூறினார் கேப்டன் பாட் கம்மிங்ஸ்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிக்காக காத்திருந்த உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், மிட்செல் ஸ்டார்க்கை விட ஜோஷ் ஹேசில்வுட்டை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணியின் முடிவை பாட் கம்மின்ஸ் தெரிவித்தபோது ஆச்சரியமடைந்தனர். சில ரசிகர்கள் ஸ்டார்க்கை அவளவுதான் என்றும் ட்ரோல் செய்தனர்.