வீடியோ : தோனி தமிழ்நாட்டின் தத்துப்பிள்ளை – தோனிக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்.
சமீபத்தில் அமைச்சர் உதயநிதி விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்க்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அமைச்சர் ஸ்டாலின், தோனி
சமீபத்தில் அமைச்சர் உதயநிதி விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்க்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அமைச்சர் ஸ்டாலின், தோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தோனி தமிழ் நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை இணையதளத்தையும் வெளியிட்டார்.
தமிழ் நாட்டில் உள்ள அனைவரையும் போல நானும் மஹேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகன. சமீபத்தில் நான் இரண்டு முறை சேப்பாக்கம் சென்றிருந்தேன் தோனி பேட்டிங் செய்வதை பார்ப்பதற்கு. சென்னையின் தத்துப்பிள்ளை தோனி தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்று நான் நம்புகிறேன். ஒரு பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்த மஹேந்திர சிங் தோனி அவரது கடின உழைப்பினால் இன்று உலகளவில் ஒரு ஜகானாக திகழ்கிறார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டாலும் இன்றும் அவரது புகழ் குறையவில்லை அதற்கு முழு காரணம் அவரையே சேரும். உதாரணமாக இந்திய அணிக்காக விளையாடும் போது கேப்டனாகவும், வீரராகவும் தோனி பெரிய சாதனைகளை படைத்துள்ளார். அவரது தலைமையில் இந்தியா இரண்டு முறை உலகக் கோப்பையையும் வென்றுள்ளது.
#WATCH | "Like everyone in Tamil Nadu, I am also a very big fan of MS Dhoni…I hope our adopted son of Tamil Nadu will continue to play for CSK…He is an inspiration for millions of Indian youth…We want to create many more Dhonis from our Tamil Nadu, not just in cricket but… pic.twitter.com/tcdRMZp2Ix
— ANI (@ANI) May 8, 2023
சென்னை ரசிகர்களை பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று சொன்னால் போதும் முதலில் நியாபகம் வருவது தல எம்.எஸ்.தோனி என்ற பெயர் தான், அந்த அளவிற்கு எம்.எஸ்.தோனிக்கும் சென்னை மண்ணிற்கும் உள்ள ஒரு பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் பல வட இந்தியர்களை வெறுத்தாலும் அனைவராலும் வெறுக்கப்படாத ஒரு வட இந்தியர் யார் என்றால் அது எம்.எஸ்.தோனி தான்.
அந்த அளவிற்கு சென்னை முழுவதும் ‘தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் தோனியின் இரண்டாவது சொந்த ஊர் சென்னை என்றே சொல்லலாம்.ஐபிஎல் தொடங்கி காலத்திலிருந்து இன்று வரையில் அதிகமுறை ஒரே அணிக்கு கேப்டனாக இருந்த ஒரே வீரர் அது எம்.எஸ்.தோனி தான். அதோடு இவரது தலைமையில் சென்னை அணி நான்கு முறை ஐபிஎல் படங்களை வென்றிருக்கிறது. ஐந்து முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.