சூத்ர தாண்டவம் ஆடிய நிகோலஸ் பூரன் – முதல் முறையாக MLC கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் சாதனை.

கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும்

By ·

கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் லீக் போட்டிகளை நடத்தி கிரிக்கெட்டை வளர்த்து வருகிறார். அந்த வகையில் தான் அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் போட்டியானது நடந்து முடிந்திருக்கிறது.

இந்த போட்டியானது சில நாட்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. 6 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மொத்தமாக 15 போட்டிகள் மட்டுமே நடக்க இருக்கிறது. இந்நிலையில் TSK, WAF, MINY, SOR அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் SOR அணி TSk அணியை வீழ்த்தி பைனலுக்கு சென்று விட்டது, இந்நிலையில் MINY vs WAF போட்டியில் மும்பை வெற்ற நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான பைனல் போட்டியானது இந்திய நேரப்படி இன்று காலை நடந்தது.

இந்த போட்டியில் சியாட்டில் ஒர்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார் அணிகள் மோதின. இந்நிலையில் முதலில் படாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் தொடக்கம் முதலே தடுமாறி வந்த SOR அணியின் துவக்க வீரரான நௌமன் அன்வர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 9(13) ரன்களை எடுத்தார். இதற்கு அடுத்த படியாக களமிறங்கிய ஜெயசூரியாவும் 16(15) ரன்களுக்கு ஆட்டமிழக்க சியாட்டில் அணியானது தடுமாறியது.

இருந்த போதிலும் பொறுமையாக விளையாடிய குயின்டன் டி காக் அரை சதம் விளாச நம்பிக்கை வீரரான கிளாசான் வெறும் 4(7) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து குயின்டன் டி காகுடன் கைகோத்து ரஞ்சனானே ஒரே ஓவரில் 4 போர்களை தொடர்ந்து விளாசினார். இந்நிலையில் குயின்டன் டி காக் 87(52) ரன்களில் ஆட்டமிழக்க இதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்களினால் MINY பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே அடித்தனர்.

மும்பை பேட்டிங் :

இதனையடுத்து வெற்றி பெற 184 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார் அணியின் தொடக்க வீரரான ஸ்டீவன் டெய்லர் முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க நிகோலஸ் பூரன் அதிரடியை ஆரம்பமாக சிக்ஸ் அடித்த ஆரம்பித்தார். அதற்கு பிறகு பூரன் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். வெறும் 16 பந்துகளிலேயே அரை சதத்தை எட்டிய புராண வேகத்தை குறைக்காமல் தொடர்ந்து விளையாடினர்.

இதன் போது மும்பை அணிக்கு சில விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பூரன் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் சதம் விளாசினார். மேலும் தொடர்ந்து விளையாடிய பூரன் 137(55) ரன்களை அடித்து அசத்தினார். இதன் முன்னாள் MLC லீக்கில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்து மும்பை அணியை வெற்றி பெற செய்தார். இதனால் வரலாற்றில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது MLC லீக்கில் கோப்பையை வென்றது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை