“ஸ்டோக்ஸ் மீண்டும் மெசேஜ் செய்தால் டெலிட் செய்து விடுவேன்” டெஸ்ட் ஓய்வை அறிவித்த மொயின் அலி.

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 தொடரானது தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இதில் முதல் மற்றும் இரண்டவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற பிறகு இந்த தொடரில் ஆஸ்திரேலியாவே வெற்றி பெரும் என்று நினைத்தார்கள். ஆனால் அதற்கு பிறகு 3 டெஸ்ட் போட்டிகளும் அதிர்ச்சிக்கு பஞ்சம் இல்லை என்று

By ·

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 தொடரானது தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இதில் முதல் மற்றும் இரண்டவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற பிறகு இந்த தொடரில் ஆஸ்திரேலியாவே வெற்றி பெரும் என்று நினைத்தார்கள். ஆனால் அதற்கு பிறகு 3 டெஸ்ட் போட்டிகளும் அதிர்ச்சிக்கு பஞ்சம் இல்லை என்று தான் கூற வேண்டும். 3 வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற, 4வது போட்டி மழை காரணமாக தடைபட்டது இந்நிலையில் 5வது போட்டி பல அதிர்ச்சிகளை கொடுத்து இங்கிலாந்து அணியானது வெற்றி பெற்றது.

சொல்லப்போனால் இந்த வருடத்தின் ஆஷஸ் தொடரானது மீண்டும் டெஸ்ட் தொடருக்கு புத்துணர்சசி தந்துள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சர்ச்சை, டிராமா, சூழ்நிலை, ரசிகர்களின் அன்பு என பல சேர்த்த ஒரு கலவையாக இருந்தது. இந்நிலையில் தான் பல ஆண்டுகாலம் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு பெற்றார். இது ரசிகர்களுக்கு அதிர்த்தியாக இருந்த நிலையில் மீண்டும் மொயின் அலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசிய பேட்டியில் “எனக்கு மீண்டும் ஸ்டோக்ஸியிடமிருந்து ஒரு செய்தி வந்தால் நான் அதை டெலிட் செய்ய போகிறேன். இது ஒரு அற்புதமான உணர்வாக இருக்கிறது. சொல்லப்போனால் மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பி வருவது கொஞ்சம் பயமாக இருந்தது. ஏனென்றால் நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவ்வளவு சிறப்பாக விளையாடியதில்லை, மேலும் ஸ்டோக்ஸி என்னிடம் கேட்டபோது நான் நினைத்தேன் “ஏன் நம்மால் முடியாது கண்டிப்பாக என்னால் நன்றாக செயல்பட முடியும் என்று எனக்கு நானே ஊக்கப்படுத்தி கொண்டேன்.

“நான் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பி வந்து விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதல் நாளிலிருந்தே நான் பாஸ் மற்றும் ஸ்டோக்ஸியுடன் ட்ரீஸிங் ரூமிற்க்கு மீண்டும் வந்த்து பிராட் , ஜிம்மி மற்றும் வூடியுடன் விளையாடியது ஆச்சரியமாக இருந்தது. மேலும் ஆரம்பத்தில் நான் கொஞ்சம் திணறினேன். ஆனால் எனக்கு கிடைத்த உதவினால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியுடன் முடிக்க முடிந்தது என்றார் மொயின் அலி.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “அவர்கள் என்னிடமிருந்து சிறந்த விளையாட்டை வெளியே கொண்டு வந்தனர், ஆனால் நான் குறை கூறவில்லை. இந்த தொடரில் நான் நல்ல ரன்களை எடுத்துள்ளேன், இங்கிலாந்துடன் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதையும் இந்த நாட்டில் உள்ள அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் நான் மிகவும் ரசித்துள்ளேன். இது ஆச்சரியமாக இருந்தது என்று மொயின் கூறினார்.

இந்நிலையில் அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் மொயின் அலி கடந்த 2021 இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் இந்த ஆஷஸ் தொடருக்கு முன்னதாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச்சின் துரதிர்ஷ்டவசமான காயம் ஏற்பட்டு போட்டியில் இருந்து விளக்கினார். இதனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோருடன் கலந்துரையாடியதன் மொயின் அலி மீண்டும் அணிக்கு திரும்பினார். அந்த நிலையில் தான் மீண்டும் தன்னுடைய டெஸ்ட் ஓய்வு குறித்து அறிவித்துள்ளார் மொயின் அலி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை