ஆஷஸ் 2023 தொடரில் மொயின் அலிக்கு அபராதம். என்ன காரணம் தெரியுமா?
சமீபத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடந்த முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி இந்தியாவை சுலபமாக வீழ்த்தியது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா இங்கிலாந்தி
சமீபத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடந்த முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி இந்தியாவை சுலபமாக வீழ்த்தியது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா இங்கிலாந்திற்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரை விளையாடி வருகிறது.
இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 393 ரன்களை விளாசிய டிக்ளர் கொடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதன் பிறகு சுதாரித்து கொண்டு 386 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த போட்டியின் போது இங்கிலாந்து வீரர் மெயின் அலிக்கு விதிமுறைகளை மீறியதாக 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரில் ஆத்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது நடந்தது. அதாவது 89வது ஓவரை வீசுவதற்கு முன்பாக மொயின் அலி தனது பந்துவீச்சு கையில் உலர்த்தும் ஸ்ப்ரேவை கொண்டு பவுண்டரி கோட்டில் இன்று பயன்படுத்தினார். இது அம்பயர்களின் முன்கூட்டிய கொடுத்த உத்தரவை மீறி இந்த சம்பவம் நிகழ்ந்தது. முன் அனுமதியின்றி தங்கள் கைகளில் எதையும் பயன்படுத்தக் கூடாது என்பது விதிமுறைகள்.
இந்நிலையில் இது கண்டறியப்பட்ட நிலையில் மொயின் அலியும் அதனை ஒப்புக்கொண்டார். மேலும் தனக்கு தரப்படும் தண்டனையையும் அவர் ஏற்றுக்கொண்டார். எனவே முறையான விசாரணை தேவையில்லை. மேலும் அம்பயர்களும் மொயின் அலி தனது கைகளை உலர்த்துவதற்கு மட்டுமே ஸ்ப்ரேயைப் பயன்படுத்தினார் என்று உறுதிப்படுத்திக் கொண்டனர். அதோடு அந்த ஸ்ப்ரே பந்தில் செயற்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படவில்லை, அதன் விளைவாக அது பந்தின் நிலையை மாற்றவில்லை என்பதையும் உறுதிப்படுத்தி கொண்டனர்.
ஒருவேளை அப்படி நடந்திட்டிருந்தார் அது ஐசிசி விளையாடும் நிபந்தனைகளின் 41.3 வது விதியை மீறியிருக்கும் – அதாவது அன்ஃபெயர் ப்ளே – தி மேட்ச் பால் – பாலின் தன்மையை மாற்றுவதாகும். ஆனால் மொயின் அலி கைகளை உலர்த்துவதற்கு மட்டுமே தான் அதனை பயன்படுத்தியதால் லெவல் 1 மீறல்களுக்கு வீரரின் கண்டனத்தின் குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்படும். ஒரு வீரரின் போட்டிக் கட்டணத்தில் அதிகபட்சமாக 50 சதவீதம் அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு டீமெரிட் புள்ளிகள் விதிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.