இங்கிலாந்தோட இந்த விளையாட்ட பாத்துட்டு எல்லா அணியும் இனிமேல் இத செய்ய போது பாருங்க – விமர்சித்த முகமது கைப்.

உலக கோப்பை 2023 தொடர்நது தற்போது சுறுசுறுப்பான கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு சாதகமாக எதுவும் செல்லவில்லை. குறிப்பாக இந்த உலக கோப்பையில் முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடன் பெரும் தோல்வியை சந்தித்தது அதனை தொடந்

By ·

உலக கோப்பை 2023 தொடர்நது தற்போது சுறுசுறுப்பான கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு சாதகமாக எதுவும் செல்லவில்லை. குறிப்பாக இந்த உலக கோப்பையில் முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடன் பெரும் தோல்வியை சந்தித்தது அதனை தொடந்து. பங்களாதேஷ் அணியை வீழ்த்தினாலும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழலில் விழுந்து யாருமே எதிர்பார்க்காத வண்ணம் தோல்வியை தழுவியது.

இதனால் இங்கிலந்து அணி தற்போது புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலைமை தொடருமாயின் இங்கிலந்து இந்த உலக கோப்பையின் அரையிருதி போட்டிக்கு செல்வது கடினமாக இருக்கும். இதனால் வரும் போட்டிகளை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் இங்கிலந்து அணி. இப்படிபட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் அணியிடம் மோசமான தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி குறித்து பேசியுள்ளார் முன்னாள் வீரரான முகமது கைப்.

அவர் பேசுகையில் “மொயின் அலி விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் உங்களின் சிறந்த லெவன் எது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர் முதல் போட்டியில் விளையாடினார், பிறகு நீங்கள் அவரை நீக்கினீர்கள். எனவே உங்களின் சிறந்த லெவன் அணியை நீங்கள் தீர்மானிக்க வேண்டும், அதன் பிறகு பேட்டிங் செய்ய வேண்டும்.

“நீங்கள் 284 போன்ற இலக்குகளைத் துரத்த வேண்டும். சுழலுக்கு எதிராக நீங்கள் தாக்குப்பிடிக்க விரும்புவீர்கள் ஆனால் அது நடக்காது. நீங்கள் நன்றாக ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாட வேண்டும். நீங்கள் குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை இந்தியாவுக்கு எதிராக விளையாட வைத்தோம். மேலும் அஷ்வினும் அந்த போட்டியில் விளையாடலாம். ஒவ்வொரு அணியும் இங்கிலாந்து அணியின் ஆட்டத்தை பார்த்த பிறகு இங்கிலாந்துக்கு எதிராக அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் என்று நினைக்கிறன்

மேலும் டாப்லியின் பற்றி பேசிய அவர் கூறுகையில் “அகமதாபாத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அவர்கள் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோற்றனர். அது ஒரு பெரிய தோல்வி. அங்கு அவர்களால் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் வங்கதேசத்திற்கு எதிராக ரீஸ் டாப்லி வந்தார், அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். டாப்லியை அந்த இடத்தில நீக்கியிருந்தீர்கள் என்றார் அந்த இடத்தில நீங்கள் நான்கு விக்கெட்டுகளை எடுத்திருக்க மாடீர்கள்.

அவர்கள் மாற்றங்களைச் செய்கிறார்கள், ஆனால் பந்துவீச்சு மிகவும் தட்டையானது. கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட் தாக்கப்படுகிறார்கள். நீங்கள் டாப்லியை ஒதுக்கி வைத்தால், வேறு எந்த நேர்மறையும் இல்லை. நீங்கள் எப்படி முன்னேறுவீர்கள்? உலகக் கோப்பையை பேட்டிங் அடிப்படையில் மட்டும் வெல்ல முடியாது, பந்துவீசிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் முகமது கைப்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை