விராட் கோலி பேச மாட்டாரு அவரோட பேட்டுதான் பேசும் – புகழ்ந்து தள்ளிய இந்திய அணியின் முன்னாள் வீரர்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில் இந்த தொடரில் விளையாடும் இந்த அணியே உலகக்கோப்பை தொடரின் பிளேயிங் லெவனாக இருக்கும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் அசிய கோப்பை 2023 பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் பெரிதும் எதிர்பார்பை ஏற்படுத்திய விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பலரும் விராட் கோலியும் கிரிக்கெட் முடிந்து விட்டதாக கூறினார்கள் ஆனால் அது பொய் என்று சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சதம் அடித்து தான் இன்னும் விளையாட்டில் தான் இருக்கிறேன் என்பதை கூறினார். இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக விராட் கோலி குறித்து முகமது கைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் கொடுத்த பேட்டியில் “சவால்களை சமாளிப்பது விராட்டின் சிறந்த குணங்களில் ஒன்றாகும். அதுவே அவருக்கு பழக்கமாகிவிட்டது. இது ஒரு பெரிய போட்டி, பாகிஸ்தானுக்கு எதிரான அவரது சாதனை சிறப்பானது. பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடும் போதெல்லாம், அவரது பேட் பேசும். மேலும் அவர் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. தொடர்ந்து சிறப்பாக செயல்படும் ஒருவரிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்
புதிய வீரர்களுக்கு, இது ஒரு பெரிய விளையாட்டு என்பதால், எதிர்பார்ப்புகள் அதிகமாக இல்லை. ஆனால் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தோல்வியடைந்தால், ரசிகர்கள் அதை விரும்பவே மாட்டார்கள். அதில் சமரசம் இல்லை; எனவே அவர்கள் போட்டால் சிறப்பாக செயல்பட வேண்டும் மற்றும் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக தங்கள் ஃபார்மைத் போலவே தொடர்ந்து மீண்டும் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “ஷாஹீன் தனது இன்ஸ்விங்கில் பந்து வீசி தொடர்ந்து பந்தை உள்ளே கொண்டு வருவார். அவரது கேம் பிளான் மிகவும் எளிமையானது, பந்தை உள்ளே கொண்டு வந்து வேகமா என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டுள்ளார். பேட்ஸ்மேன் எதைச் செய்ய விரும்புகிறாரோ அவரை அதை செய்ய விட்டு தன்னுடைய விளையாட்டுத் திட்டமமான பந்தை உள்ளே கொண்டு வருகிறார்.
எனவே, விராட் கோலிக்கு அவர் பந்துவீச்சுவதை பார்ப்பது சிறப்பான ஒன்றாக இருக்கும். இது விளையாட்டின் மிக முக்கியமான போட்டியாகும். விராட்டின் சிறப்பு என்னவென்றால், பெரிய போட்டிகளில் விளையாடுவது அவரது திறமை, அவர் பின் காலில் விளையாட மாட்டார். நசீம் ஷா, அப்ரிடி அல்லது ரவுஃப், யார் பந்து வீசினாலும், பின்காலில் விளையாட வேண்டாம். வாய்ப்பு கிடைத்தால், முதல் பந்தில் கூட பவுண்டரி அடிப்பார் என்று கூறியுள்ளார் முகமது கைப்.