ஹர்திக் பாண்டியாதான் உலக கோப்பையை வென்று கொடுக்க போகிறார் – முகமது கைஃப் சொன்ன காரணம்.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் இந்த தொடருக்கு பின்னர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் டி20 மாயாஜாலமானது உலக கோப்பை டி20 தொடர் வடிவில் வர இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற உலக கோப்பைக்கு ஏற்கனவே வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் முன்னாள் இந

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் இந்த தொடருக்கு பின்னர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் டி20 மாயாஜாலமானது உலக கோப்பை டி20 தொடர் வடிவில் வர இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற உலக கோப்பைக்கு ஏற்கனவே வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் இந்த தொடரில் இந்திய அணியின் தேர்வு குறித்தும், ஹர்திக் பாண்டியாவின் முக்கியத்தும் குறித்து பேசினார்.

அவர் கூறுகையில் : விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை விடவும் ஐசிசி நிகழ்வுகளில் ஹர்திக் பாண்டியா மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய மேட்ச் வின்னர் என்று நான் கருதுகிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகளை நினைவு கூர்ந்து பார்த்தல் மெல்போர்னில் விராட் கோலி 82 ரன்கள் எடுத்தார், ஆனால் ஹர்திக் பாண்டியா ஒரு முக்கியமான 40 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஜடேஜா வெளியேற்றப்பட்டதை அடுத்து நவாஸுக்கு எதிராக இறுதி ஓவரில் ஹர்திக் பாண்டியா திறமையாக விளையாடி அணியை மீட்டு தனது இறுதித் திறமையை வெளிப்படுத்தி இருந்தார் என்றார் முகமது கைப். மேலும் பேசிய அவர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

அவர் கூறியதாவது : 100% தற்போது உள்ள அணி சமநிலையான அணியாக இருக்கிறது. இருப்பினும் இது ஐபிஎல் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஐபிஎல்லில் தொடரில் உங்களுக்கு 14 லீக் போட்டிகள் இருந்தால், தோல்வியை தழுவினாலும் அதிலிருந்து மீண்டு வந்து கோப்பையை வெல்லலாம்.

ஆனால் உலக கோப்பை கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பலவீனமான அணிகள் ஆரம்ப கட்டத்தில் நீங்கள் எதிர்கொள்வீரக்ள். பின்னர் பாகிஸ்தான் அல்லது இங்கிலாந்து போன்ற வலிமையான எதிரிகளை அரையிறுதி போட்டியில் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். இந்த இரண்டு குறிப்பிடத்தக்க போட்டிகளில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றார் முகமது கைஃப்.

டி20 உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி :

ரோஹித் சர்மா , யஷஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ். ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இருப்பு வீரர்கள்: சுப்மான் கில், ரிம்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை