இது ஐபிஎல் கிடையாது.. இங்க விளையாட திறமை வேணும் – முகமது கைஃப் அறிவுரை.
இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டும
இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய அணி கோப்பையை தகுவதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது.
இந்த உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துவே போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மூத்த வீரர்கள் இன்னமும் அணியில் இருந்து வருகின்றனர். மேலும் ஹர்திக் பாண்டியதான் இந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவை வழிநடத்துவார் என்றிருந்த நிலையில் அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவே கேப்டனாக இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று இந்தியாவும் பங்களாதேஷ் அணியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியானது நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன் எடுத்து வெளியேற ரோஹித் சர்மா 19 பந்துகளை 23 ரன்களை எடுத்தது.
ரிஷப் பண்ட் மற்றும் 32 பந்துகளில் 53 ரன் எடுக்க சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடிய நிலையில் அவரும் பின்னர் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்த்து விளையாடிய சிவம் துவே 14 ரன்களிலும் வழக்கம் போல ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 40 ரன்களையும் எடுத்த நிலையில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.
சொல்லப்போனால் இந்த போட்டியில் சுலபமாக விளையாடியது போல தெரியவில்லை. இதற்கு பிறகு களமிறங்கிய பங்களாதேஷ் அணியை 122 ரங்களுக்குள் சுருட்டி 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் இந்திய அணி விளையாடியது குறித்து பலருக்கும் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்.
நியூயார்க்கில் ஆடுகளங்கள் நேற்று இருந்தது போல ஒரே மாதிரியாக விளையாடினால், பேட்டிங் கடினமாக இருக்கும். ஸ்பாங்கி பவுன்ஸ் ஆக இருக்கிறது. மேலும் பெரிய மைதானம் ஆனால் மெதுவான ஆடுகளம் என்று பந்தின் நகர்வு அதிகமாக் இருக்கிறது. இதனால் நுட்பத்துடன் கூடிய பேட்ஸ்மேன்கள் மட்டுமே இங்கு ரன்கள் எடுப்பார்கள். இது கண்டிப்பாக ஐபிஎல் அல்ல என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முகமது கைஃப்.