“ஆமா இந்தியா கூட ஒரு போட்டி தோத்துட்டோம். அதுக்கு ஒன்னும் அப்படி அர்த்தம் இல்லையே” – மௌனம் கலைத்த ரிஸ்வான்.

உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர்.

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.

உலகக்கோப்பை ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிரான போட்டியை அகமதாபாத்தில் நடத்த வேண்டாம் வேறு ,மைதானத்தை மாற்றி அமைக்குமாறு கேட்டு கொண்ட நிலையில் ICC மற்றும் பிசிசிஐ அதை பற்றி ஏதும் அவர்கள் அதே மைதானத்தில் விளையாடும்படியும் கூறி இருந்தது. ஆனால் நேற்று நடத்த கோஷங்கள் தான் தற்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.

30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டனர். இந்த கோஷம் குறித்து pcb iccயிடம் புகார் அளித்துள்ளது.இது குறித்து icc விசாரணை நடத்துவதாக கூறி இருக்கின்றது.

மௌனம் கலைத்த பாபர் ஆசாம்:

அன்றைய போட்டியில் நடைபெற்ற சர்ச்சை குறித்து பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். பாகிஸ்தானின் முன்னால் வீரர் கனேரியாவும்அவர் எதற்கு மைதானத்தில் நமாஸ் செய்தார் என்றும் பாகிஸ்தான் வீரரை கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல அங்கு எழுப்பப்பட்ட ஸ்ரீ ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் குறித்து PCB ICCயிடம் புகார் ஒன்று அளித்துள்ளது.

இது குறித்த முதல் முதலாக பேசிய பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் கூறுகையில் நாங்கள் “இந்தியாவுடன் தோற்றால் நாங்கள் திறமை அடிப்படையில் கீழே இருக்கிறோம் என்று அர்த்தம் கிடையாது. முழு ஆட்டமும் விழிப்புணர்வின் அடிப்படையில் தான் இருக்கின்றது. எங்களின் திறமை மிகச் சிறப்பாக இருக்கிறது. நாங்கள் விளையாடி விளையாடிக் கொண்டிருந்தோம் தங்களது திறமை மிக சிறப்பாகவே இருந்தது. வரும் காலங்களில் ஒரு நாள் தொடரில் நாங்கள் யாரென்று நிரூபிப்போம்” என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை