பயங்கரமாக பந்துவீசியும் தோல்வியுற்ற குஜராத் டைட்டன்ஸ் – ஆட்டநாயகன் முகமது ஷமி வருத்தம்.
ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டி குஜராத் டைடன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியும், அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் பலம் வாய்த்த குஜராத் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியை பெற்றது டெல்லி அணி. இந்த போட்டியின் டாஸை வென்று முதலில் கலரமிறங்கிய டெல்லி அண
ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டி குஜராத் டைடன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியும், அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் பலம் வாய்த்த குஜராத் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியை பெற்றது டெல்லி அணி. இந்த போட்டியின் டாஸை வென்று முதலில் கலரமிறங்கிய டெல்லி அணியின் 4 விக்கெட்டுகளை 4 ஓவர்களிலேயே வீழ்த்தி பெரிய அடி கொடுத்தது குஜராத்.
இருந்த போதிலும் பொறுமையாக ஆடிய அக்சர் மற்றும் அமன் பொறுமையாக விளையாடி ரன்களை குவித்து 20 ஓவர்கள் முடிவில் 130 ரன்களை எடுத்தனர் டெல்லி அணி. இவ்வளவு குறைவான ரன்களில் டெல்லி அணியை சுருட்டுவதற்கு முக்கியமான காரணமானவர் முகமது ஷமி. இவர் சிறப்பாக பந்துவீசி 4 வர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளையும் பெற்று சசத்தினார். அதோடு அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது இன்னிங்கில் 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களம் கண்ட குஜராத் அணியால் 20 வது ஓவர்கள் முடிவில் 125 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இரண்டாவது இன்னிங்கில் அற்புதமாக பந்து வீசிய இஷாந்த் ஷர்மா 4 ஓவர்களில் 23 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதோடு கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசி சிக்ஸர்களை பறக்கவிட்ட ராகுல் தேவாடியாவை வீழ்த்தி டெல்லி அணிக்கு ஹீரோவாக மாறினார்.அப்படிப்பட்ட நிலையில் தான் குஜராத் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி தோள்விக்குறித்து பேசினார்.
முகமது ஷமி பேசியது :
அவர் கூறுகையில் “நாங்கள் போட்ட திட்டத்தில் ஒன்றியிருக்க முயற்சி செய்தேன். சரியாக லைனிலும் லெந்திலும் போடா நாங்கள் கலந்துரையாடினோம். அதன் காரணமாக எங்களால டெல்லி அணியின் டாப் ஆர்டரை சுலபமாக வீழ்த்த முடிந்தது. இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறன். 131 ரன்கள் என்பது கடினமான ஒரு சேசிங் செய்ய ரன்கள் கிடையாது.
இருந்த போதிலும் எங்களினால் அந்த ரன்களை எடுக்க முடியாவில்லை. அதற்கு காரணம் தொடர்ந்து விக்கெட்டுக்குகளை விட்டதுதான். எங்களுக்கு ஒரு பார்ட்னெர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் அதனை சரியான நேரத்தில் கொண்டு வரமுடியவில்லை. இருந்த போதிலும் எங்களுக்கு இன்னமும் அதிக போட்டிகள் மீதம் இருக்கிறது. இருந்த போதிலும் சரியாக செயல்பட்டு தோல்வியடைந்தது மனதிற்கு வருத்தமாக இருக்கிறது என்று கூறினார் ஷமி.