உங்களை பாராட்டி கொள்வதிலேயே பிஸியா இருக்கீங்க.. அவரோட பேச்சை கேளுங்க – முகமது ஷமி பதிலடி.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 37 ஆவது போட்டியை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணியும் தென்ஆப்பிரிக்கா அணியும் மோதின. இதில் அற்புதமான வெற்றியை பதிவு செய்தது இந்த

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 37 ஆவது போட்டியை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணியும் தென்ஆப்பிரிக்கா அணியும் மோதின. இதில் அற்புதமான வெற்றியை பதிவு செய்தது இந்தியா. மேலும் இந்திய அணி இந்த உலக கோப்பை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் இடத்தில் மட்டுமல்லாமல் அரை இறுதி சுற்று தகுதி வாய்ந்துள்ளது.

மேலும் இந்திய அணி அதிரடியாக விளையாடி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தரமான சம்பவத்தை இந்தியா செய்தது. மேலும் இந்தியாவின் தூண்களாக இருக்கும் விராட் கோலி 49 வது சதத்தை விளாசி கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். மேலும் இந்தியாவின் பந்துவீச்சாளர்களும் தங்களை சிறந்த பந்துவீச்சாளர்கள் என்று நிரூபித்துள்ளனர்.

குறிப்பாக முதல் தொடக்கத்தில் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த சமி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் வரையில் பொறுத்திருந்தார். அதன் போது இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு பதிலாக களமிறங்கிய சமி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களுடைய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை எடுத்து நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி தொடரில் 20 வருடங்கள் கழித்து இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார்.

அதை தொடர்ந்து தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 230 ரன்களை இந்தியா கட்டுப்படுத்தும் போது 4 விக்கெட்களை எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற மிகப்பெரிய பங்காற்றினார் முகமது ஷமி. மேலும் இலங்கை அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய முகமது சமி 5 விக்கெட்டுகளை எடுத்து இலங்கை அணியை வெறும் 55 ரன்கள் சுருட்ட உதவியாக இருந்தார்

இந்நிலையில் இந்திய வீரர்களின் இடஙக அற்புதமான செயல்பாட்டிற்கு பாகிஸ்தான் வீரர்களே பாராட்டிய நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ராஸா இந்திய அணி டிஆர்எஸ் முறையில் ஏமாற்றுவதாகவும், ஸ்பெஷல் பந்துகளை பெறுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் அதிர்ப்த்தி தெரிவித்து கருத்து கூறிய நிலையில் தான் முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியான பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில் “இதை சொன்னதற்காக அவமானமாக உணர்ந்து உங்களுடைய விளையாட்டில் கவனத்தை செலுத்துங்கள். மற்றவர்களின் வெற்றிக்காக மகிழ்ச்சியடையுங்கள். இது ஐசிசி நடத்தும் தொடர் உள்ளூர் தொடரில்லை. உங்களுடைய முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் இது பற்றி விளக்கினார். எனவே அவரையாவது நம்புங்கள். ஹாஹாஹா. நீங்கள் உங்களையே பாராட்டுவதில் பிஸியாக இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார் சமி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை