ஒப்பீடு முட்டாள்தனமானது.. பாபர் மாதிரி ஆடியிருந்தா சொல்லிருக்கலாம் – முகமது அமீர் கருத்து.
உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சில
உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.
கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 48 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி இன்னமும் 1 சதம் அடித்தார் என்றால் சச்சின் சாதனையை சமன் செய்து விடுவார். மேலும் அது இந்த உலக கோப்பை போட்டியில் நடக்கும் என்று பலரும் கணித்திருக்கின்றனர்.
மறுபுறம் உலகின் நம்பர் 1 பேட்மேனாக இருந்து வரும் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம இந்த உலக கோப்பை போட்டியை பொறுத்தவரையில் கொஞ்சம் மோசமாக விளையாடி வருகிறார்.சொல்லப்போனால் அரை சதம் அடிக்கவே பாபர் திணறி வருவது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தலும் பாகிஸ்தான் ரசிகர்கள் பாபர் அசாம் விராட் கோலியை விடவும் சிறந்த வீரர் என்று கூறி வருகின்றனர்.
இருப்பினும் இந்த உலக கோப்பை தொடரில் சுமாராக செயல்பட்டதால் விராட் கோலி, ராகுல் போன்றவர்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று பாபர் அசாமை முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி விமர்சித்திருந்தார். குறிப்பாக வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ரன்கள் அடிக்காத பாபர் அசாம் மேட்ச் வின்னர் போல தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்தது பெரிய தாக்கத்தை பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எதிராக ஏற்படுத்தியது
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் பாபர் அசாம் மற்றும் விராட் கோலி ஒப்பீடு குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் ” ஒருவேளை நேபாள், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வங்கதேசம் போன்ற அணிகளுக்கு எதிராக விராட் கோலி அதிகமாக விளையாடினால் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை பல காலத்திற்கு முன்பே உடைத்திருப்பார்.
பெரும்பாலும் அவர் அது போன்ற தொடர்களில் விளையாடுவதில்லை. அப்படியிருந்தும் எதற்காக விராட் கோலியுடன் தொடர்ந்து ஒப்பிடுகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. இந்த ஒப்பீடுகள் முட்டாள்தனமானது. அத்துடன் அவர்களின் ஆட்டத்தை பாருங்கள். இலங்கைக்கு எதிராக விராட் கோலி பந்துகளுக்கு நிகரான ரன்களை அடித்தார் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது 48 சதங்களை விளாசியுள்ள கோலி 49 வது சதத்தை விளாசுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.