“மற்றவர்களின் பெயர் எனக்கு வேண்டாம்… நானும் 360 வீரராக மாறுவேன்” பாகிஸ்தான் இளம் வீரர் அதிரடி பேட்டி.
பாகிஸ்தான் ஏ அணியில் விளையாடிவரும் முகமது ஹாரிஸ் தன்னுடைய பேட்டிங் விதம் குறித்தும் சூரியகுமார் யாதவ் பேட்டிங் விதம் குறித்தும் பேசியிருப்பது தற்போது சோசியல் மீடியால் படு பங்கரமாக வைரலாகி வருகிறது. இந்திய அணியில் தற்போது அதிரடி 360 டிகிரி வீரராக வளம் வந்து கொண்டிருப்பவர் சூரியகும
பாகிஸ்தான் ஏ அணியில் விளையாடிவரும் முகமது ஹாரிஸ் தன்னுடைய பேட்டிங் விதம் குறித்தும் சூரியகுமார் யாதவ் பேட்டிங் விதம் குறித்தும் பேசியிருப்பது தற்போது சோசியல் மீடியால் படு பங்கரமாக வைரலாகி வருகிறது. இந்திய அணியில் தற்போது அதிரடி 360 டிகிரி வீரராக வளம் வந்து கொண்டிருப்பவர் சூரியகுமார் யாதவ். இவர் பல காலம் முயற்சி செய்து பின்னர் கந்த 2021ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார்.
பந்துகளை பறக்கவிடம் இவரது தனித்திறமையே பந்துகளை 360 டிகிரி முழுவதும் அடிக்க கூடிய திறன் கொண்டவர். எப்படி பந்துகளை வீசினாலும் அதனை எங்காத்து அடித்து ரன் எடுத்து விடுவார். இப்படிபட்ட இப்போதே சில சமயங்களில் தம்மை மிஞ்சும் நீங்கள் ஓய்வு பெறுவதற்குள் உச்சத்தை தொடுவீர்கள் என்று உண்மையான மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டுகளையும் சூரியகுமார் கடந்த காலங்களில் பெற்றார்.
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் ஏ அணியை சேர்ந்த 2வயதாகும் முகமது ஹாரிஸ் என்பவர் தன் முயற்சி செய்தால் இவர்கள் இருவரி விடவும் சிறந்த 360 வீரராக மாறமுடியும் என்று பேசியிருக்கிறார். இது குறித்து அந்த வீரர் கூறுகையில் ” இப்போதே எங்கள் இருவரையும் நான் ஒப்பிட விரும்பவில்லை. ஏனெனில் சூர்யா 32 – 33 வயதில் இருக்கிறார். மறுபுறம் நான் வெறும் 22 வயது பையன். எனவே அந்த உச்சத்தை தொடுவதற்கு நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.
அதே சமயம் சூர்யா தன்னுடைய அளவில் அசத்துகிறார். ஏபி டீ வில்லியர்ஸ் தனக்கென்று ஒரு அளவையும் தரத்தையும் கொண்டுள்ளார். அவர்களைப் போல நானும் 360 டிகிரி பேட்ஸ்மேன் என எனக்கென்று ஒரு பெயரை உருவாக்க விரும்புகிறேன். அதனால் அவர்களின் பெயர்களை நான் பயன்படுத்த விரும்பவில்லை” என்று கூறினார்.
மேலும் இந்தியாவிடம் மோதுவது தங்களுக்கு மற்ற அணிகளுடன் மோதுவது போன்றுதான் என்றும் நாங்கள் எங்களுடைய முழு திறமையையும் போட்டியில் வெளிப்படுத்துவோம் என்றும். நாங்கள் ஓன்று இந்தியாவிற்கு விளையாட வரவில்லை, இந்தியாவை எதிர்த்து மற்ற அணிகளை போல விளையாடுவோம் என்று கூறினார். இருப்பினும் இதுவரை பெரிதாக எதுவும் சாதிக்காக இவர் இந்த வயதிலேயே சூரியகுமார் யாதவ், டீ வில்லியர்ஸ் போன்ற சாதித்த நட்சத்திர வீரர்களுடன் தம்மை இப்படி ஒப்பிட்டு பேசுவது நெட்டிசன்கள் மதில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
இந்நிலையில் இலங்கையில் நடைபெற்று வரும் அந்த ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் ஜூலை 17ஆம் தேதியான இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன. அதில் இந்தியாவுக்கு எதிராக அசத்துவதற்கு முகமது ஹாரிஸ் தயாராகி வருகிறார். அப்படி அந்த போட்டியில் முகமது ஹாரிஸ் சாதிக்கும் பட்சத்தில் இந்த விஸஹ்யம் மேலும் பிரபலமாகும் என்பதில் சந்தேகம் கிடையாது.