கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நபர் தன்னிடம் செய்த செயல் – BCCIல் சிராஜ் புகார்.

உலகின் மிகப்பெரிய டி20 லீக் அதாவது இந்தியன் பிரீமியர் லீக்கில் இதுவரை மொத்தம் 25 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது ஐபிஎல் தொடர்பான ஒரு பெரிய செய்தி வெளியாகி உள்ளது. ராயல் சேலஞ்சர் பெங்களூர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அந்த அணிக்கு மிகவும் முக்கியமான பந்துவீச

By ·

உலகின் மிகப்பெரிய டி20 லீக் அதாவது இந்தியன் பிரீமியர் லீக்கில் இதுவரை மொத்தம் 25 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது ஐபிஎல் தொடர்பான ஒரு பெரிய செய்தி வெளியாகி உள்ளது. ராயல் சேலஞ்சர் பெங்களூர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அந்த அணிக்கு மிகவும் முக்கியமான பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். சொல்லப்போனால் இவர் பல முக்கியமான விக்கெட்டுகளை ஆர்சிபி அணிக்காக எடுத்து கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் இதற்கு முன்னர் இந்திய அணி ஆஸ்திரேலயாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் பங்கேற்றது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி முதல் மற்றும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டிகளில் முக்கிய பந்துவீச்சாளராக இருந்தவரும் சிராஜ் தான். இவர் பல விக்கெட்டுகளை இந்திய அணிக்காக வீழ்த்தி கொடுத்தார். அப்படியொரு நிலையில் தற்போது இவர் ஆர்சிபி சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

இதற்கிடையில் அவர் ஐபிஎல்லில் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றிய கூறியிருகிறார். அதாவது ஒரு நபர் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாகவும் அணி தொடர்பான தகவல்களை தனக்கு கொடுத்தால் அதிக அளவு பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் உடனே பந்து வீச்சாளர் சுராஜ் இது குறித்து உடனடியாக பிசிசிஐக்கு தகவல் தெரிவித்தார். சிராஜிடம் இருந்து தகவல் கிடைத்ததும், ஏசியூ நடவடிக்கையில் இறங்கி அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் கூறுகையில் “சிராஜைத் ​​தொடர்பு கொண்ட நபர் எந்த புக்கியும் கிடையாது. அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓட்டுநர். கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டி அந்த பந்தயத்தில் ஏராளமான பணத்தை இழந்துள்ளார். இந்த காரணத்திற்காக, அவர் அணியின் உள் தகவல்களுக்காக சிராஜை தொடர்பு கொண்டார். இதுகுறித்து உடனடியாக சிராஜ் தகவல் தெரிவித்தார்.

டிரைவர் கைது :

அந்த நபர் குறித்து முகமது சிராஜ் பிசிசிஐக்கு தகவல் தெரிவித்தவுடன், ஏசியூ குழுவினர் ஹைதராபாத்தை சேர்ந்த டிரைவரை கைது செய்தனர். அந்த டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும், பிசிசிஐ அல்லது ஏசியூ தரப்பிலிருந்து இன்னும் எந்த தகவலும் வரவில்லை.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை