கடைசி நேரத்தில் நடையை கட்டிய இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் – அவருக்கு பதிலாக யார் களமிறங்குவார்?
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வ
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மீண்டும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
அதில் முதல் போட்டியானது இன்று தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முதன்மை வீரர்களுடன் இத்தொடரில் இந்தியா களமிறங்குகிறது. அத்துடன் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், சஹால் போன்ற வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் ஸ்பெசலிஸ்ட் வீரர்கள் இந்த தொடரில் இணைந்துள்ளதால் இந்தியா மேலும் வலுவடைந்துள்ளது.
இதனால் 2023 உலக கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்த தொடரில் வலுவான இந்தியாவை வீழ்த்தியே ஆகவேண்டிய காட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரிலிருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதாவது 2023 ஆசிய மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக விளையாடுவார் என்று கருதப்படும் சிராஜ் இந்த வருடம் ஆரம்ப முதலே தொடர்ச்சியாக இந்தியா பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் விளையாடி வருகிறார். குறிப்பாக கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நடந்த இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர், ஐபிஎல், WTC, IND vs WI என பல போட்டிங்களில் விளையாடிய அவருக்கு ஓய்வு என்பது காட்டாயம்.
இதனால் சிராஜ் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை விட மிகவும் முக்கியமான ஆசிய மற்றும் உலக கோப்பையில் பணிச்சுமையை நிர்வகித்து புத்துணர்ச்சியுடன் களமிறங்க இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. அதன் காரணமாகவே இந்த தொடரில் அவருக்கு தாமாக ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக பிரபல ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் உம்ரான் மாலிக், முகேஷ் குமார் போன்ற இளம் வீரர்களே போதும் என்றும் இந்திய அணி நிர்வாகம் நினைப்பதாக தெரிகிறது
இதனால் தான் சிராஜ் போன்ற முக்கிய வீரருக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அஸ்வின் போன்ற வீரர்கள் நாடு திரும்பிய போது முகமது சிராஜும் இந்தியாவுக்கு சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் வரும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.