“பணம் இன்று வரும் நாளை போய்விடும்” ஆனால் பரம்பரியத்தை விட்டுவிடக் கூடாது – ஐபிஎல் குறித்து மிட்செல் ஸ்டார்க் பேட்டி.
நடந்து முடிந்த உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி அவைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. சொல்லப்போனால் இந்திய அணி முதல் நாளிலிலேயே தோற்று விட்டதாக பல முன்னாள் வீரர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் தவறான அணியை
நடந்து முடிந்த உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி அவைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. சொல்லப்போனால் இந்திய அணி முதல் நாளிலிலேயே தோற்று விட்டதாக பல முன்னாள் வீரர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் தவறான அணியை தயார் செய்த்து. டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பவுலராக இருக்கும் அஸ்வினை அணியில் இருந்து தூக்கியது.
அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான ரோஹித் ஷர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது. பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை கொடுத்தது என்று சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட நிலையில் தான் இந்தியாவின் இந்த தோல்விக்கு ஐபிஎல் முக்கிய காரணம். ஐபிஎல் போட்டியினால் வீரர்கள் சரியான பயிற்சி எடுக்க முடியவில்லை என்று ரவி சாஸ்திரி, கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளை குற்றம் சாட்டினார்கள்.
அதே போல ரோஹித் ஷர்மாவும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிவிட்டு இங்கு வந்து விளையாடியதுதான் தோல்விக்கு முக்கியமான காரணமாக இருக்கலாம் என்றார். அப்படிப்பட்ட நிலையில் தான் இந்த போட்டிக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரரான மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் போட்டிங்களில் விளையாடுவது குறித்த பேசியுள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் :
அவர் கூறுகையில் “நான் ஐபிஎல் விளையாடுவதை ரசித்திருக்கிறேன், ஆனால் அத்ற்கு மேலாக நான் ஆஸ்திரேலியாவிற்கு இளையாடுதை பார்க்கிறேன். நான் ஐபிஎல் போட்டிகளில் இளையாடவில்லை என்ற எந்த வருத்தமும் எனக்கு கிடையாது. பணம் இன்று வரும் நாளை சென்று விடும், ஆனால் ஆஸ்திரேலியாவிற்காக விளையாட எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்கிறேன்.
கடந்த 100 ஆண்டுகால ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் வெறும் 500 வீரர்கள் மட்டுமே நாட்டிற்காக விளையாடியுள்ளனர். இதனால் நான் நாட்டிற்காக விளையாடியவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ஸ்டார்க் இது வரையில் 78 டெஸ்ட் போட்டிகளிலும், 110 ஒருநாள் போட்டிகளிலும், 58 டி20 போட்டிங்களிலும் விளையாடி இருக்கிறார். இனி வரும் சங்கதிகளும் ஐபிஎல் போன்ற போட்டிகளுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட்டிற்காக விளையாட முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாடும் பொது அதில் சுலபமாக பணம் சம்பாதிக்கலாம், ஆனால் பரம்பரியத்தை விட்டுவிடக் கூடாது. இருந்த போதிலும் நான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் என்னுடைய குறிக்கோள் ஆஸ்திரேலியாவிற்காக நான் என்னுடைய சிறப்பை கொடுக்க வேண்டும். எந்த போட்டியாக இருந்தாலும் நமக்கு பிடித்த நன்பர்களுடன் அமர்ந்து இப்படிப்பட்ட ஒட்டு வெற்றியை கொண்டாடுவது என்பது அலாதியான விஷயம்.
ஐபிஎல் போன்ற போட்டிகளும் சிறந்ததுதான். ஆனால் உங்களுடைய திறமையை சரியாக பயன்படுத்தினால் 12 மாதங்களில் ஒரு உறுதியான இடத்தை அணியில் பிடிக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு எனக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்வேன், ஏனென்றால் நான் பார்த்து வளர்ந்ததே டெஸ்ட் கிரிக்கெட் பார்த்துதான் என்றார் மிட்செல் ஸ்டார்க்.