இந்தியாவை இந்த விஷயத்தில் கண்டிப்பாக பாராட்ட வேண்டும் – பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில்

By ·

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில் இந்த தொடரில் விளையாடும் இந்த அணியே உலகக்கோப்பை தொடரின் பிளேயிங் லெவனாக இருக்கும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நாள் மழை காரணமாக தடைபட்ட நிலையில் அடுத்த நாள் மீண்டும் அந்த போட்டியானது தொடர்ந்த்து. மேலும் இந்த நாளில் அற்புதமாக விளையாடிய விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் சதம் விளாசி அசத்தி இருந்தனர்.இதனால் இந்திய அணி இந்திய அணி 50 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது. 

பின்னர் 357 ரன்கள் அடித்தால் வெற்றி இன்று இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் விராட் மற்றும் ராகுல் சிறப்பாக செயல்பட்ட நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்நிலையில் இந்த மோசமான தோல்விக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் இதர பவுலர்களையும் இந்திய பேட்ஸ்மேன்கள் மனதால் உடையும் அளவுக்கு அடித்ததாக கூறியுள்ளார். அவர் கூறுகையில் “இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பின் நாங்கள் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தோம். என்னைப் பொறுத்த வரை தற்சமயத்தில் எங்களின் பந்து வீச்சாளர்கள் சற்று சுயமாக சிந்திக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

குறிப்பாக வெற்றிக்கான கடினமான கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இந்த சமயத்தில் இந்திய பேட்ஸ்மேன்களையும் நான் பாராட்ட வேண்டும். ஏனெனில் அவர்கள் ஆரம்பத்திலேயே எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினர். இது உலக கோப்பைக்கு முன்பாக எங்களுக்கு நல்ல பாடமாகும். நாசீம் ஷா காயத்தால் வெளியேறியது நிச்சயம் பெரிய பின்னடைவாகும்.

இந்தியாவிடம் தோல்வியை சந்தித்ததால் நாங்கள் இலங்கைக்கு எதிராக நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்களுடைய உண்மையான சுயரூபத்தை காட்டுவார்கள் என்று நம்புகிறேன். இதிலிருந்து நாங்கள் இன்னும் வலுவாக கம்பேக் கொடுக்க முயற்சிப்போம் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை