“கூகுள் மேப்ஸ்க்கு டாடா” தெரியாத நபர்களிடம் வழி கேட்ட தோனி – வீடியோ இதோ.

எம்.எஸ்.தோனிக்கு புதிய மற்றும் விண்டேஜ் பைக்குகளின் மீதியுள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தனக்கு பழைய கார்களின் மீதும் பிரியம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் தலைசிறந்த கேப்டங்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. அவர

By ·

எம்.எஸ்.தோனிக்கு புதிய மற்றும் விண்டேஜ் பைக்குகளின் மீதியுள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தனக்கு பழைய கார்களின் மீதும் பிரியம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் தலைசிறந்த கேப்டங்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. அவர் கேப்டனாக ஆனவுடன் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்று தந்தார் தோனி.

பின்னர் இந்த வெற்றி தொடர ஆரம்பித்து பல போட்டிகளில் வெற்றி பெற்ற தோனி 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் பல ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று கொடுத்தார். இதற்கு பிறகு 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியிலும் கோப்பையை வென்று கொடுத்த தோனி ஐபிஎல் போட்டியிலும் சென்னை அணிக்காக 5 கோப்பைகளை வென்றது கொடுத்தார்.

இரண்டு மாத கால சீசனுக்குப் பிறகு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அன்றிலிருந்து தனது குடும்பத்துடன் சில தரமான நேரத்தைச் செலவழிக்கிறார். சமீபத்தில் கூட தன்னுடைய கைக்குகளில் கலெக்சன்களை தன்னுடைய நண்பர்களுக்கு காட்டிய வீடியோ பெருமளவு வைரலானது. அப்படிபட்ட நிலையில் சமீபத்தில் தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் 1980 காரை ஓட்டிக் கொண்டிருந்த ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

மேலும் ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் இருக்கும் கேரேஜில் இருக்கும் பைக் மற்றும் கார்கள் இருக்கும் வீடியோ ஓன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதே போன்று ஓய்வெடுக்கும் நேரங்களில் அங்கிருக்கும் கார் மற்றும் பைக்குகளை அவரே சீரமைத்து அதில் பயணமும் செய்து வருகிறார். இந்நிலையில் தான் மீண்டும் ஒரு வின்டேஜ் வகை காரை தோனி தன்னுடைய ஊரில் இ வீடியோ ஓன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது.

அந்த வரிசையில் தற்போது ராஞ்சியில் இருக்கும் ஒரு அடையாளம் தெரியாத ஊருக்கு செல்ல விரும்பிய தோனி அதற்காக செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இருந்த ரசிகர்களிடம் வழி கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாகவே நம்மில் பலர் தெரியாத ஊருக்கு செல்லும் போது அங்கே இருப்பவர்களிடம் உதவியை கேட்காமல் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது வழக்கமாகும். ஆனால் பல சமயங்களில் அது தவறான பாதையை காண்பித்து சிக்கலான இடத்தில் கொண்டு போய் விடுவது சகஜமாகும்.

ஆனால் டெக்னாலஜி வளர்ந்த இந்த யுகத்திலும் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தாத தோனி தம்முடைய நண்பருடன் தெரியாத ஊருக்கு காரில் செல்லும் போது அதற்கான வழியை ரசிகர்களிடம் கேட்டார். அந்த அதிர்ஷ்டமான வாய்ப்பில் தோனிக்கு ஒன்றுக்கு 2 முறை சரியான வழியை ரசிகர்களும் சொன்னார்கள். இறுதியாக தமக்கு வழி சொன்ன ரசிகர்கள் ஃசெல்பி எடுப்பதற்கு கேட்ட போது புன்னகை முகத்துடன் போஸ் கொடுத்த தோனி இறுதியாக கை கொடுத்து விட்டு வழி சொன்னதற்கு நன்றியை தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை