தோனியின் சொத்து மதிப்பு விராட் கோலியை மிஞ்சுமா? முழு விபரம் இதோ.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டாலும் இன்றும் அவரது புகழ் குறையவில்லை அதற்கு முழு காரணம் அவரையே சேரும். உதாரணமாக இந்திய அணிக்காக விளையாடும் போது கேப்டனாகவும், வீரராகவும் தோனி பெரிய சாதனைகளை படைத்துள்ளார்.

By ·

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டாலும் இன்றும் அவரது புகழ் குறையவில்லை அதற்கு முழு காரணம் அவரையே சேரும். உதாரணமாக இந்திய அணிக்காக விளையாடும் போது கேப்டனாகவும், வீரராகவும் தோனி பெரிய சாதனைகளை படைத்துள்ளார். அவரது தலைமையில் இந்தியா இரண்டு முறை உலகக் கோப்பையையும் வென்றுள்ளது. இருப்பினும் அவர் ஓய்வு பெற்று பல நாட்கள் ஆகியும் அவரது வருமான என்பது இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

தோனியின் வருமான வரி :

எம்.எஸ் தோணி கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவர் ஓய்வு பெற்ற பிறகும் தோனியின் வருமானம் என்பது குறையவில்லை. சொல்லப்போனால் கடந்த மார்ச் 31ம் தேதி ரூ.38 கோடியை வருமான வரித்துறைக்கு வாரியாக செலுத்தியுள்ளார் எம்.எஸ்தோனி. அதே நேரத்தில், 2021-22 ஆம் ஆண்டிலும் அதே அளவு வரி செலுத்தியுள்ளார். இப்போது 2022-23ல் எம்.எஸ்.தோனியின் வருமானம் சுமார் 130 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எம்எஸ் தோனியின் பிராண்ட் மதிப்பு ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்ததைப் போலவே இப்போதும் இருப்பதாக பல மூத்த வீரர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் நம்புகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்களான சச்சின், சேவாக், கங்குலி மற்றும் யுவி ஆகியோர் ஓய்வு பெற்றபோது, ​​அவர்களின் வருமானம் என்பது பெரிய அளவில் குறைந்தது, ஆனால் தோனிக்கு அப்படி கிடையாது.

தோனியின் வருமானம் என்ன?

சொல்லப்போனால் எம்.எஸ்.தோனி கிரிக்கெட் தவிர்த்து பல வழிகளில் சம்பாதிக்கிறார். குறிப்பாக தோனி அதிக விளம்பரங்கள் செய்கிறார். ஆனால் இன்ஸ்டாவில் 8 கோடிகளுக்கு மேலே ஒரு விளம்பரத்திற்கு விராட் வாங்கும் தொகையை விட இது குறைவு தான். அதனை தவிர்த்து அவர் ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கிறார். மேலும் கிரிக்கெட் பயிற்சி மையத்தையும் எம்.எஸ்.தோனி திறந்து வைத்துள்ளார். இவைகள் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் மிகவும் ஆக்டிவ் வீரராகவும் விளையாடி வருகிறார் தோனி.

மேலும் பல்வேரு விளையாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் தோனி, ஜியோ சினிமா போன்ற 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்தும் கொடுத்திருக்கிறார். இதிலிருந்து தலா 4 முதல் 6 கோடிகள் வரையில் தோனி பெறுகிறார். மேலும் 2 சொகுசு பங்களாவும் விலையுயர்ந்த கார் மற்றும் பைக்குகளையும் வைத்துள்ளார் தோனி. இப்படி அனைத்து சொத்து மதிப்புகளும் 1040 கோடிக்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த சொத்துமதிப்பானது தற்போது இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேறாக இருக்கும் விராட் கோலியின் சமீபத்திய சொத்து மதிப்பை விடவும் 10 கோடி குறைவுதான். இந்நிலையில் தோனியின் சொத்து மதிப்பு குறித்த ட்விட் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதே சமயம் அடுத்த ஐபிஎல் போட்டியிலும் தோனி விளையாடுவேன் என்று கூறியுள்ள நிலையில் இந்த மதிப்பு மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை