தோனிக்கு இப்படி ஒரு மூடநம்பிக்கை இருந்ததா? – வீரேந்திர சேவாக் கூறிய சுவாரசியமான தகவல்.

உலக கோப்பை 2023 ஆம் ஆண்டிற்கான அட்டவணை இன்று வெளியான நிலையில், பிரத்தியேக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீரேந்திர சேவாக் 2011ஆம் ஆண்டின் உலகக்கோப்பையில் தோனிக்கு இருந்த மூடநம்பிக்கை குறித்து சில வார்த்தைகளை தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில

By ·

உலக கோப்பை 2023 ஆம் ஆண்டிற்கான அட்டவணை இன்று வெளியான நிலையில், பிரத்தியேக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீரேந்திர சேவாக் 2011ஆம் ஆண்டின் உலகக்கோப்பையில் தோனிக்கு இருந்த மூடநம்பிக்கை குறித்து சில வார்த்தைகளை தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டாலும் இன்றும் அவரது புகழ் குறையவில்லை அதற்கு முழு காரணம் அவரையே சேரும்.

உதாரணமாக இந்திய அணிக்காக விளையாடும் போது கேப்டனாகவும், வீரராகவும் சில இக்கட்டான சூழ்நிலைகளில் தோனி பெரிய சாதனைகளை படைத்துள்ளார். அவரது தலைமையில் இந்தியா மூன்று முறை உலகக் கோப்பையையும் வென்றுள்ளது. ஐபிஎல் பைனலுக்கு அழைத்து சென்று 5 முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். மேலும் ஸ்டம்புகளுக்குப் பின்னால் வழக்கம் போல் மின்னல் வேகத்தில் ஸ்டாம்பிங் செய்வது இவருக்கு வயதே ஆகாத என்ற கேள்வியை ரசிகர்களுக்கு எழுப்பியது.

இந்நிலையில் இந்த வருட சீசனோடு தோனி விடைபெறுவார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில் அதற்கு பதிலளித்து முற்றுபுள்ளி வைத்தார் தோனி. ஆனால் ஐபிஎல் போட்டியின் இடையிலேயே தோனிக்கு மூலங்களில் காயம் ஏற்பட்டது. இருந்த போதிலும் தோனி அந்த காயத்தோடே பல போட்டிகளில் விளையாடி வெற்றியும் பெற்று கொடுத்தார். இந்த காயத்தால் இந்த சீசனோடு தோனி ஓய்வு பெறுவார் என்றிருந்த நிலையில் என்னுடைய ரசிகர்களுக்காக

இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு இரண்டாவது உலக கோப்பையை இந்தியா வெல்லும் போது பைனல் போட்டியில் ரன்கள் நடித்திருந்தாலும், அந்த தொடரில் சொல்லும்படியாக பெரிய ரன்கள் அடிக்கவில்லை, ஆனாலும் இறுதி போட்டியில் அவர் அடித்த அந்த ரன்கள் வெற்றிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் தான் பேட்டி ஒன்றில் பேசிய சேவாக் தோனி பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் 2011 உலகக்கோப்பையில் அனைவருக்கும் ஏதோ ஒரு மூடநம்பிக்கை இருந்தது, எல்லோரும் அவர்களுடையதை பின்பற்றுகிறார்கள். அவர்களை போலவே தோனிக்கும் உலகக் கோப்பை முழுவதும் ‘கிச்சடி’ சாப்பிட வேண்டும் என்ற மூடநம்பிக்கை இருந்தது என்றார் சேவாக். மேலும் தோனி “நான் ரன்களை எடுக்காவிட்டாலும், இந்த மூடநம்பிக்கை வேலை செய்கிறது, நாங்கள் போட்டிகளில் வெற்றி பெறுகிறோம் என்று தோனி கூறுவார் என்று சேவாக் ஸ்டார் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை