அவருக்கு அந்த விளையாட்டு தான் சரியா இருக்கும் – இலங்கைக்கு தோனி கொடுத்த அட்வைஸ்.

ஐபிஎல் 2023 இன் 49வது போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே M. சிதம்பரத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில், டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்த சென்னை கேப்டன் எம்எஸ் தோனி, மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். முதலில் பேட்ட

By ·

ஐபிஎல் 2023 இன் 49வது போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே M. சிதம்பரத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில், டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்த சென்னை கேப்டன் எம்எஸ் தோனி, மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணி மிக மோசமான தொடக்கமே கிடைத்து.

முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கத்திலே பெரிய அடியாக ரோஹித் ஷர்மா வெளியேறினார். அதற்க்கு பிறகு சூர்ய குமார் யாதவ் மற்றும் வதேரா இணைந்து வலுவான கூட்டணி அமைத்து 55 ரன்களை குவித்து வந்த நிலையில் சூர்யகுமார் 26 ரன்களில் ஜடேஜாவின் சுழலில் வெளியேறினார். மற்றொரு பக்கம் நிதானமாக விளையாடி வந்த வதேரா ரன்களை குவித்து அணிக்கு நம்பிக்கையை சேர்த்தது மட்டுமல்லாமல் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

அதன் பின் பதிரனா வீசிய பந்தலில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதற்கு பிறகு வந்த வீரர்களும் சரியாக ஆடாத நிலையில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவு 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை விளாசியது. 140 ரன்கள் எடுத்தால் என்று களமிறங்கிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள் இறுதியில் சென்னை அணி 14 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெற்றியை பதிவு செய்தது.

பதிரினா :

இந்த ஐபிஎல் சீசனை பொறுத்தவரையில் இதுவரை சென்னை அணிக்காக மதிச பத்திரனா சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். முக்கியமான சந்தர்ப்பங்களில் அணிக்கு வெற்றியைக் கொண்டு வந்துள்ளார். அதே போல இந்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட பதிரினா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் போட்டி முடிந்ததும் எப்போதும் போல சென்னை அணியின் குட்டி மலிங்கா பதிரினாவை புகழ்ந்து பேசிய தோனி அவருக்கு சிகப்பு பந்து விளையாட்டு வேண்டாம் என்றார்.

பதிரினா குறித்து தோனி :

அதாவது “சிறப்பான பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இது பேஸ் மற்றும் வேரியேஷன் கிடையாது, இது தெடர்ந்து சிறப்பாக பந்துவீசுவதை பொருத்து இருக்கிறது. பதிரினா சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடாமல் அனைத்து ஐசிசி போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவர் இலங்கைக்கு வருங்கலத்தில் பேரிக்காய் வீரராக இருப்பர். கடந்த சீசனில் சற்று ஒல்லியாக இருந்தார், ஆனால் தற்போது தசைகளை அதிகரித்து விட்டார் என்றார் தோனி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை