MI vs CSK போட்டி முடிந்ததும் சூரியகுமார் யாதவிற்கு நீண்ட நேரம் அறிவுரை கூறிய தோனி – அடுத்த போட்டியில் சதம் நிச்சயமா?

ஐபிஎல் 2023 தொடங்கி 10 நாட்களுக்கு மேலே ஆகியும் இன்னமும் மும்பை அணி ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய வில்லைa. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சென்னை vs மும்பை போட்டியில் மும்பை அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. அந்த தோல்விக்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது அணியின் பேட்டிங்தான் கார

By ·

ஐபிஎல் 2023 தொடங்கி 10 நாட்களுக்கு மேலே ஆகியும் இன்னமும் மும்பை அணி ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய வில்லைa. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சென்னை vs மும்பை போட்டியில் மும்பை அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. அந்த தோல்விக்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது அணியின் பேட்டிங்தான் காரணம். சொல்லப்போனால் மும்பை அணியின் டி20 நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து தோல்வியடைந்ததே முக்கிய காரணம்.

இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் நன்றாக ரன்கள் எதுவும் எடுக்காமல் தோல்வியை தழுவியுள்ளார் சூர்யகுமார் யாதவ். இந்நிலையில் மும்பை vs சென்னை போட்டி முடிந்ததும் சூர்யாவை எம்.எஸ். தோனி சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த சந்திப்பின் போது சூர்யகுமாரின் பேட்டிங் குறித்து தோனி அதுவும் பல டிப்ஸ்களை கொடுத்துள்ளார். சொல்லப்போனால் சூர்யகுமாருடன் நீண்ட நேரம் பேசிய தோனியின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒயிட் பால் கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 டிகிரி ஆஃப் இந்தியா என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதசவின் பேட் இந்த நாட்களில் மிகவும் அமைதியாக இருப்பது போல் தெரிகிறது.

ஐபிஎல்லில் அவரது மோசமான பார்ம் காரணமாக, மும்பையின் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சென்னைக்கு எதிரான போட்டிக்குப் பிறகு சூர்யகுமார் மீண்டும் தனது மோசமான பார்மில் இருந்தார். இந்த வருட ஐபிஎல் சீசன் 16 பற்றி பேசுகையில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் சூர்யகுமார் 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அது மும்பை அணிக்கு சரியானது கிடையாது.

அப்படியொரு நிலையில் தான் சென்னை vs மும்பை போட்டிக்கு பிறகு தோனியுடன் நடந்த இந்த சிறப்பு உரையாடலுக்குப் பிறகு, சூர்யகுமார் தனது பழைய ஃபார்மை மீண்டும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு எதிரான போட்டியில் SKY 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய ODI தொடரில் மூன்று போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யா தற்போது தோனியிடம் இருந்து பேட்டிங் டிப்ஸ் கிடைத்ததையடுத்து, சூர்யாவிடம் இருந்து ரசிகர்கள் பெரிய இன்னிங்ஸை எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை