வீடியோ : 77வது சுதந்திர தின நாளில் தோனி செய்த செயல் – நெகிழ்ந்து பாராட்டும் ரசிகர்கள்.
உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி அளவிற்கு கிரிக்கெட் மீதும் ஆர்வம் கொண்டுளோரோ அதை விட ராணுவத்தின் மீதும் இந்திய நாட்டின் மீதும் அதிக மரியாதையை தோனி வைத்திருக்கிறார். குறிப்பாக அவர் முன்னரெல்லாம் அணியில் விக்கெட் கீப்பிங் கையுறைகள் இந்திய ராணுவத்தின் உடையின் நிறத்தில்
உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி அளவிற்கு கிரிக்கெட் மீதும் ஆர்வம் கொண்டுளோரோ அதை விட ராணுவத்தின் மீதும் இந்திய நாட்டின் மீதும் அதிக மரியாதையை தோனி வைத்திருக்கிறார். குறிப்பாக அவர் முன்னரெல்லாம் அணியில் விக்கெட் கீப்பிங் கையுறைகள் இந்திய ராணுவத்தின் உடையின் நிறத்தில் இருக்கும். மேலும் தன்னுடைய பிறந்த குழந்தையை கூட பார்க்காமல் தனக்கு இந்தியா தான் முதலில் பின்னர் தான் மற்றவை என்று குறி தொடர் முழுவதையும் விளையாடிவிட்டுதான் தன்னுடைய குழந்தையை பார்க்க சென்றார்.
மேலும் இந்திய ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னல் என்ற கெளரவப் பதவியைப் பெற்றுள்ள தோனி, மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது மற்றும் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற மதிப்புமிக்க விளையாட்டு விருதுகளையும் பெற்றுள்ளார். சுவாரஸ்யமாக தோனி கடந்த ஆகஸ்ட் 15, 2020 சுதந்தர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் இடுகை மூலம் அறிவித்தார்.
இந்த நிலையில் தான் இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்று ஆகஸ்ட் 15, செவ்வாய்க் கிழமை கொண்டாடுகிறது. கிரிக்கெட் சகோதரத்துவம் தேசத்தின் மீது தங்கள் அன்பை வெளிப்படுத்துமாறு பல பதிவுகளை இட்டுவரும் நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியும் இந்த நாளை சிறப்பாக கொண்டாடுயுள்ளார்.
அதாவது தற்போது ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது ஓய்வு நேரத்தை அனுபவித்து வரும் தோனி குறித்த வீடியோ பதிவுகள் அவ்வவ்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாவதுண்டு. அப்படிப்பட்ட நிலையில் தான் தோனி ரசிகர் ரசிகர் ஒருவர் தன்னுடைய சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஒரு இந்தியக் கொடியை தோனி தன்னுடைய பண்ணை வீட்டில் பறக்கவிடப்பட்டுள்ளது.
புனித நாளில் தேசத்தின் மீதான தனது அன்பைக் காட்டும் தோனியின் வழியை ரசிகர்கள் நேசித்ததால் இந்த பதிவானது சிறிது நேரத்தில் வைரலானது. இந்நிலையில் ஐபிஎல்லில் MS தோனியின் பேட்டிங் எண்கள் சமீபத்திய ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்துவிட்டன. ஆனால் 2023 இல், அவர் விண்டேஜ் பாணியில் பேட்டிங்கை வெளிப்படுத்தி அனைவரையும் அதிரவைத்தார். IPL 2023 இல் வெறும் 57 பந்துகளை எதிர்கொண்டார், ஆனால் 182.46 ஸ்ட்ரைக் ரேட்டில் 104 ரன்கள் எடுத்தார்.
இது ஒரு குறிப்பிட்ட சீசனில் தோனியின் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் ஆகும். ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கான அவரது முந்தைய சிறந்த ஸ்ட்ரைக் ரேட் 2013 ஐபிஎல் பதிப்பில் 162.89 ஆகும். மேலும் இவர் குறைவான ரன்கள் மட்டுமே அடித்திருந்தாலும் அவர் அடிக்கும் ஒவ்வொரு ரன்களையும் பார்க்கவே ரசிகர்கள் மைதானத்தில் கூடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.