“என்னுடைய கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டம் இது” – தோனியின் பேச்சால் சோகத்தில் ஆழ்ந்த CSK ரசிகர்கள்.
ஒட்டு மொத்த ஐபிஎல் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தும் வகையில் மஹேந்திர சிங் தோனி கூறியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.ஐபிஎல் 2023 க்கான 29 லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி
ஒட்டு மொத்த ஐபிஎல் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தும் வகையில் மஹேந்திர சிங் தோனி கூறியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.ஐபிஎல் 2023 க்கான 29 லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை அணியின் பௌலிங்கை சமாளித்து நிதானமாக ரன் சேர்த்த துவக்க ஆட்டக்காரர் ரன்களை ப்ரூக் ஆட்டமிழக்க அடுத்த வந்த ஆகாஷ் சிங் சொற்ப ரன்களில் வெளியேற, அபிஷேக் 34 ரன்களிலே ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் வந்த நிலையிலிருந்தே சென்னை அணியின் பந்து வீச்சை விளையாட முடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது ஹைதராபாத்தை அணி.
135 ரன்களை இலக்காக களமேரங்கிய கன்வே மற்றும் ருதுராஜ் ,முதல் பந்திலே இருந்து அதிகம் செலுத்தும் வைகையில் முதல் பந்திலே பவுண்டரிக்கு அடித்தார் ருதுராஜ். 6 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை குவித்தது. அற்புதமான இன்னிங்சை தொடங்கி விளையாடி கொண்டிருந்த ருதுராஜ் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பின் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி வந்தனர். ரஹானே 9 ரன்களிலே வெளியேற ,இம்பேக்ட் பிளேயராக அம்பதி ராய்டு உள்ளே வந்தார். வெற்றி கையில் இருந்த நிலையிலும் அம்பதி ராய்டு அவுட்டாகி வெளியேறினார். இறுதி வரை நன்றாக விளையாடிய கன்வே அணியின் வெற்றியை உறுதி செய்தார், அவர் 57 பந்துகளில் 77 ரன்களை அடித்து சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
Dhoni said "I am just enjoying it as it's the final stage of my career (smiles)". pic.twitter.com/b76hR6Z8Jj
— Johns. (@CricCrazyJohns) April 21, 2023
தோனி கூறியது :
என்ன சொன்னாலும், செய்தாலும், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் கட்டம் இது. எனவே அதனை முடிந்த அளவிற்கு ரசிப்பது மிகவும் முக்கியம். சென்னைக்கு வருவது என்பது எனக்கு மிகுந்த மகிழ்சசி அளிக்கிறது. நிறைய அன்பையும் பாசத்தையும் சென்னை மக்கள் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். நான் சொல்வதனை கேட்பதற்காகவே கடைசி வரையில் மைதானத்தில் காத்திருப்பார்கள் என்று உணர்ச்சி பெறுக பேசினார் தல தோனி.