ஜடேஜாவும் கிடையாது மொயின் அலியும் கிடையாது – அணியின் மற்றொரு பௌலரை பாராட்டி பேசிய தோனி

நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 55வது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி சென்னை அணி 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த 167 ரன்களை அடித்தது. இந்நிலையில் இரண்டவது இன்னிங்கை ஆடிய டெல்லி அணியால் இந்த ஸ்கோரை எடுக்க

By ·

நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 55வது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி சென்னை அணி 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த 167 ரன்களை அடித்தது. இந்நிலையில் இரண்டவது இன்னிங்கை ஆடிய டெல்லி அணியால் இந்த ஸ்கோரை எடுக்க முடியாத நிலையில் 140 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தோல்வியை தழுவியது டெல்லி.

தோனி கூறியது :

இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய தோனி கூறுகையில் “இரண்டாம் பாதியில் அதிகமாக திரும்பியது. மற்ற பந்துவீச்சாளர்களை விட நமது சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக சீம்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். விக்கெட் மெதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்தோம். எவ்வளவு ரன்கள் எடுத்தால் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. எனவே பந்து வீச்சாளர்கள் தங்களால் எவ்வளவு சிறப்பாக பந்து வீச நான் விரும்பினேன்.

166-170 நல்ல ஸ்கோர் என்று நினைத்தேன். ஒரு பேட்டிங் யூனிட்டாக சிறப்பாக செயல்பட முடியும். மொயீனுக்கும் ஜட்டுவுக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது நல்ல விஷயம். போட்டியின் இறுதிக் கட்டத்தை நாம் நெருங்கும்போது, ​​ஒவ்வொருவரும் சில பந்துகளை விளையாடி இருப்பது மிகவும் முக்கியம்.

மிட்செல் சான்ட்னர் பற்றி பேசிய தோனி :

மிட்செல் சான்ட்னர் மிகவும் சிறப்பாக பந்துவீசினார். அவர் புதிய பந்தில் தட்டையான விக்கெட்டுகளில் சிறப்பாக செயல்பட்ட ஒருவர். அவர் சீமை அடித்து நல்ல வேகத்தில் பந்து வீசுகிறார் என்று பாராட்டி கூறினார் தோனி. பின்னர் அவர் கெய்க்வாட் குறித்து பேசிய தோனி கெய்க்வாட் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அது அவர் ஸ்கோரை அடிக்க தொடங்கினால் சிறப்பாக விளையாடுவார்.

அவருக்கு விளையாட்டு விழிப்புணர்வு உள்ளது. எந்த சூழ்நிலையிலும் விளையாட அவர் தயாராக இருக்கிறார். அப்படிப்பட்டவர்கள் கிடைப்பது அரிது. விளையாட்டைப் புரிந்து கொண்டு விளையாடுபவர்கள் அணிக்கு மிகவும் தேவையானவர்கள் என்று தோனி கூறியது குறிப்பிடதக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றியடைந்த சென்னை அணி புள்ளி பட்டியலில் பலமாக 2 வது இடத்தில் இருக்கிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை