இவர்கள் இருவரும் கடைசி வரையில் ஆடியிருந்தால் போட்டி 18வது ஓவரிலேயே முடிந்திருக்கும் – தோனி

ஐபிஎல் 2023ல் 24வது லீக் ஆட்டம் நேற்று மாலை பெங்களூரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்தது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஃபாஃப் முதலில் பந்துவீச முடிவு செய்தார், அதன் பிறகு சென்னை பேட்ஸ்மேன்கள் RCB பந்துவீச்சாளர்களை விளாசி ஸ்கோர் போர்டி

By ·

ஐபிஎல் 2023ல் 24வது லீக் ஆட்டம் நேற்று மாலை பெங்களூரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்தது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஃபாஃப் முதலில் பந்துவீச முடிவு செய்தார், அதன் பிறகு சென்னை பேட்ஸ்மேன்கள் RCB பந்துவீச்சாளர்களை விளாசி ஸ்கோர் போர்டில் 226 ரன்கள் குவித்தனர். இந்த இலக்கை துரத்திய பெங்களூரு அணி சிறப்பான தொடக்கத்தை அளித்தது.

ஆனாலும் துரதிஷ்ட வசமாக கேப்டன் ஃபாஃப் மற்றும் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தையும் மீறி பெங்களூரு அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த அபார வெற்றியில் கேப்டன் தோனி மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். 226 ரன்கள் எடுத்த பிறகும், தோனி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனாலும் ஆர்சிபியின் பேட்ஸ்மேன்களை அதிகமாக பாராட்டி பேசினார். மேலும் கடைசி நேரத்தில் சிறப்பாக பந்துவீசிய பந்துவீச்சாளர்களையும் பாராட்டினார் தோனி.

தோனி கூறுகையில் “பெங்களூருக்கு வரும்போது அது உங்களுக்கு நல்ல விக்கெட் போல தெரியும். ஆரம்ப ஐபிஎல்லில் நீங்கள் நிறைய பனியைப் பார்க்க வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு நல்ல தொடக்கத்தை விரும்புகிறீர்கள் என்றால் ரன் ரேட்டை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். நாங்கள் அதனை செய்ததால் இரண்டாம் பாதியில் அதிக கவனம் செலுத்தினோம்.சிவம் துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னால் அவர் சற்று கடினமாக இருக்கிறது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கிளீன் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவருக்காக வித்தியாசமான உத்தி எங்களிடம் இருக்கிறது. எங்களால் சிலவற்றை மட்டுமே கற்பிக்க முடியும் அதற்கு பிறகு நீங்கள் எல்லைக்கோட்டை தாண்டிவிட்டிர்கள் என்றால் அது உங்களுடைய பொறுப்பு. 220 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஷாட்களை ஆட வேண்டும்.

ஃபாஃப் மற்றும் மேக்ஸ்வெல் தொடர்ந்து விளையாடியிருந்தால் 18வது ஓவரிலும் வெற்றி பெற்றிருப்பார்கள். நான் எப்போதும் விக்கெட்டுக்கு பின்னால் இருந்து விளையாட்டில் ஈடுபட்டு முடிவைப் பற்றி யோசித்துக்கொண்டே இருப்பேன். குறிப்பாக இளம் பந்துவீச்சாளர்களுக்கு கடைசி ஓவரில் பந்துவீசுவது எப்போதுமே கடினமானது. பனி காலத்தில் இது இன்னும் கடினமாகிறது. ஆனால் மதீஷ பத்திரன சரியாக பந்துவீசினார். பிராவோவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது வழிகாட்டுதலின் கீழ் பந்துவீச்சாளர்கள் திறமையாக செயல்பட்டு வருகிறார்கள் என்றார் தோனி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை