பேட்டிங் சரியாகத்தான் இருந்தது, ஆனால் தோல்விக்கு காரணம் இது தான் – தோற்றாலும் பௌலரை பாராட்டிய தோனி.

நேற்று நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..சென்னை அணியின் தொடக்க அட்ட காரர்கள் ருதுராஜ் மற்றும்

By ·

நேற்று நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..சென்னை அணியின் தொடக்க அட்ட காரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே ஆரம்பம் முதலே அதிரடியை தொடங்கினார்.தொடர்ந்து அதிரடியாகவே விளையாடி வந்த ருதுராஜ் மற்றும் கான்வே பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சிதறடித்து வந்தனர்.

அதன் பின் ருதுராஜ் தனது விக்கெட்டை இழந்து வெளியேற, அதற்க்கு பின் வந்த டுபே ஆரம்பம் முதலே அவருடைய பாணியில் அதிரடியை காட்டிவந்தார். கான்வே 30 பந்துகளில் தன்னுடைய மற்றொரு அரை சத்தத்தை பூர்த்தி செய்தார். அதன் பின் ஜடேஜா அவுட்டாகி வெளியேற அதிரங்கமே அதிர வைக்கும் வகையில் தோனி களமிறங்கி 2 சிக்சர்களை பறக்க விட்டார். 20 வது ஓவர்கள் முடிவில் 200 ரன்களை குவித்தது சென்னை அணி. கான்வே 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து வந்தார்.

201 என்ற இமாலய இலக்கை நோக்கி களம் கண்ட பஞ்சாப் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை மளமளவென அதிகரித்தனர். ஒரு சயமத்தில் பஞ்சாப் சிக்கலில் மாட்டிக்கொண்டாலும் பஞ்சாப் பேட்ஸ்மேன் லிவிங்சன் சிறப்பாக விளையாடிய நிலையில் கட்சி ஓவரில் சென்னை அணி பரிதாபமாக தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து. இந்நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய தோனி தோல்விக்கான காரணம் குறித்து பேசினார்.

அவர் கூறுகையில் “போட்டியில் வெற்றி பெறுவதற்கு தேவையானவற்றை சரியாக செய்ய வேண்டும். கடைசி சில ஓவர்களை நாங்கள் இன்னமும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். இன்னமும் 10லிருந்து 15 ரன்கள் அதிகமாக எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் சித்தாலும், பந்துவீசுவதில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. கண்டிப்பாக எங்களது பந்துவீச்சை இன்னமும் பலப்படுத்த வேண்டியது எங்களுக்கு மிகவும் அவசியம்.

இந்த மைதானத்தில் 200 ரன்கள் என்பது போதுமானதுதான், ஆனால் எங்களுக்கு இந்த மைத்தனத்தின் அமைப்பு தெரிந்தும் 2 ஓவர்களை நாங்கள் சரியாக போடவில்லை. அதனை நாங்கள் கண்டிப்பாக ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். எங்களுடைய தற்போதய பிரச்னை பந்துவீச்சு, அதனை நாங்கள் சரியாக செய்ய வேண்டும். பதிரினா சிறப்பாக பந்துவீசினார். அதோடு முதல் 6 ஓவர்களில் நாங்கள் அதிகமாக ரன்களை கொடுப்பதை குறைத்து சரியாக பந்து வீச வேண்டும் என்றார் தோனி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை