ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மாஸ் காட்டி உலக கோப்பையில் இடம்பிடிப்பார் பாருங்கள் – எம்எஸ்கே பிரசாத் பேச்சு
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடரானது தொடங்க இன்னமும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஆசிய கோப்பை தொடர்நது நடைபெற்றது இதில் இந்திய அணியானது தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் அற்புதமாக விளையாடிய 8வது முறையாக ஆசிய கோப்பையையும் வென்றது. இது ப
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடரானது தொடங்க இன்னமும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஆசிய கோப்பை தொடர்நது நடைபெற்றது இதில் இந்திய அணியானது தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் அற்புதமாக விளையாடிய 8வது முறையாக ஆசிய கோப்பையையும் வென்றது. இது பலருக்கும் ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. மேலும் இந்த போட்டி இந்திய அணிக்கு உலக கோப்பையின் போது பெரிய உந்துதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்திய அணையானது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்குகிறது. 2023 ஆசிய கோப்பை வென்ற கையுடன் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வெடுக்கும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆச்சரியப்படும் வகையில் தேர்வாகியுள்ளனர்.
மேலும் காயத்தை சந்தித்த அக்சர் படேல் உலக கோப்பை போட்டியில் தேர்வாகியுள்ள நிலையில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரும் ஸ்பின்னர்களுமே லெக் அல்லது இடது கை ஸ்பின்னர்களாக இருக்கின்றனர். அதனால் எதிரணிகளில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பதற்காக ஆஃப் ஸ்பின்னர் தேவ. இதனால் தான் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உலகக் கோப்பை அணியிலும் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவேளை அஸ்வின் இந்த ஆஸ்திரேலியா தொடரில் அசத்தும் பட்சத்தில் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் ரவிச்சந்த்திரன் அஸ்வின் கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாத நிலையில் அவரை நேரடியாக உலகக் கோப்பையில் தேர்வு செய்யக்கூடாது என்று நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தான் இந்த அஸ்வின் தேர்வு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் “இந்த நல்ல செய்தி என்று நினைக்கிறேன். சொல்லப்போனால் இந்திய மைத்தனங்களில் பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருப்பார் என்று நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன். ஏனென்றால் இந்திய மண்ணில் மட்டுமே அவர் கிட்டத்தட்ட 500 சர்வதேச கிரிக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் உலக கோப்பை போட்டியில் அனைத்து எதிரணிகளிலும் 3 முதல் 4 இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். எனவே இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆபத்தானவர் என்பதை அவர் நிச்சயம் நிரூபிப்பர். மேலும் இந்த ஆஸ்திரேலிய தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டு இந்திய உலகக்கோப்பை அணியிலும் இடம் பிடிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார் எம்எஸ்கே பிரசாத் என கூறினார்.