விராட் கோலிக்கு மீண்டும் கேப்டன் பதவி? முன்னாள் இந்திய அணியின் தேர்வாளர் பரபரப்பு பேட்டி.

இந்திய அணியானது கடந்த ஜூலை 2ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் தொடரை விளையாட சென்றது. இந்த தொடரானது வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது 2023 - 2025 டெஸ்ட் சாம்பியன் ஷிப் சுற்றில் இடம்பெட்டிருப்பதால் இந்த போட்டியில் வெல்லும் முனைப்பில் இந்திய அணி இருக்கிறது. அதே

By ·

இந்திய அணியானது கடந்த ஜூலை 2ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் தொடரை விளையாட சென்றது. இந்த தொடரானது வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது 2023 – 2025 டெஸ்ட் சாம்பியன் ஷிப் சுற்றில் இடம்பெட்டிருப்பதால் இந்த போட்டியில் வெல்லும் முனைப்பில் இந்திய அணி இருக்கிறது. அதே சமயம் உலக கோப்பை போட்டியில் இருந்து வரலாற்றில் முதல் முறையாக வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் புதிய தொடக்கத்திற்காக இந்த போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் தான் இந்த தொடரில் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மாவும் துணை கேப்டனாக ரஹானேவும் நியமிக்கப்பட்டனர். அதோடு சில இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்திய அணியானது சமீப காலமாகவே டெஸ்ட் போட்டிகளில் மோசமாக சொதப்பி வருகிறது. குறிப்பாக கடந்த உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் இந்திய படுதோல்வியை சந்தித்தது.

ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு தோனியின் கேப்டன்சிக்கு பிறகு பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. சொல்லப்போனால் பல வெளிநாடு தொடர்களில் இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் விராட். இப்படியொரு நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்தியாவின் துணை கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியமளித்து.

முன்னாள் தேர்வாளர் கூறியது :

இந்நிலையில் இந்த விஷயம் குறித்து பேசிய பிரசாத் “இந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. தேர்வாளர்களின் மனநிலை எனக்கு தெரியாது. வழக்கமாக, தேர்வாளர்களின் மனநிலை இப்போது WTC சுழற்சியுடன் இருக்க வேண்டும், அது ஒரு தெளிவான சுழற்சியாக இருக்க வேண்டும், அப்படித்தான் மனநிலை இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் எதிர்கால இந்திய அணிக்கும் அது சரியாக இருக்கும்.

வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக பல மாதம் கழித்து வந்த ரஹானேவை உடனடியாக துணை கேப்டனாக நியமிக்கும் போது விராட் கோலிக்கு ஏன் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினர் பிரசாத். ஏனென்றால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று அவர்களது அணில் தொடரை கைப்பற்றுவது என்பது சாதாரண காரியம் கிடையாது. அதனை விராட் கோலி செய்தும் காட்டினார்.

மேலும் 2021 – 23 உலக கோப்பை டெஸ்ட் சாம்பிய ஷிப் தொடருக்காக இந்தியா விளையாடிக்கொண்டிருக்கும் போது பல மாதம் டெஸ்ட் கேப்டனாக கோலிதான் இருந்தார். இந்நிலையில் இந்த பேட்டியில் தொடர்ந்து பேசிய பிரசாத் “தேர்வாளர்கள் எப்படி யோசிக்கின்றனர் என்று தெரியவில்லை, தேர்வாளர்கள் ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக ஒரு கேப்டனை போடவேண்டும் அதற்கு விராட் கோலிதான் சரியாக இருப்பார் என்றும் எதிர்கால இந்திய அணியை வழிநடத்த விராட் கோலி சரியான ஒருவராக இருப்பார் என்றும் தெரிவித்தார் பிரசாத்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை