“நீங்க ரெண்டு பேரும் வாய்யை மூடிட்டு சும்மா இருந்த போதும்” – பாபர் ஆசாம்க்கு ஆதரவாக பேசிய முகமது யூசுப்.
பாபர் ஆசாம்க்கு ஆதரவாக பேசிய முகமது யூசுப். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்
பாபர் ஆசாம்க்கு ஆதரவாக பேசிய முகமது யூசுப். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.
இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் சில தினங்களுக்குமுன் நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.
30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர்.
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான்அணியின் முன்னாள் வீரர்களும் முன்னாள் கேப்டன்களும் பாபர் ஆசாமை விமர்சித்தும் அவரை கடுமையாக தாக்கியும் பேசி இருந்தார்கள். அதிலும் சோயப் மாலிக் அவர் கேப்டன் பதவிக்கு தகுதி கிடையாது அவரை அதில் இருந்து மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அந்த கருத்திற்கு எதிர்ப்பாகவும் பாபர் ஆசாம்க்கு ஆதரவாகவும் முகமது யூசுப் தற்போது அவருடைய கருத்தை கூறியுள்ளார்.
முகமது யூசுப் கூறியது:
அவர் கூறுகையில், “உலகக் கோப்பை போட்டி நடந்து கொண்டிருக்கும் போது யாரும் ஒரு அணியை பற்றி இவ்வாறு எல்லாம் பேசக்கூடாது என்று நான் நினைக்கிறேன். இரண்டாவதாக இம்ரான் கான் 1983 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் தான் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். அவர் தன்னுடைய மூன்றாவது முயற்சி தான் 1992 ஆம் ஆண்டில் தான் உலகக்கோப்பை பாகிஸ்தானுக்கு வென்றார். முதல் இரண்டு முயற்சிகளிலும் அவரும் தோல்வி தான் அடைந்திருந்தார்.
எந்த ஒரு நல்ல வீரருக்கும் கேப்டனாக தொடர அனுமதிக்க வேண்டும். பாபர் ஆசாம் நீண்ட காலமாக பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். ஏனென்றால் அவருடைய திறமை இருக்கிறது அவருக்கு அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு தலைவராக இருந்து கேப்டனாக நிறுத்தவில்லை. அவர் திறமையால் தான் கேப்டனாக மாறினார். அவர் ஒரு சிறந்த கேப்டன்” என்று சோயப் மாலிக் மற்றும் வாசிம் ஆக்ரமையும் கடுமையாக சாடி பேசி இருந்தார்.