காயம் காரணமாக IPL 2024 இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறுவார் என தகவல். “இதற்க்கு பெயர் தான் கர்மா என கொண்டாட்டத்தில் மும்பை ரசிகர்கள்”
உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள். இது வணிக
உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள். இது வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் விளையாடும் விளையாட்டு ஆகும். இந்த லீக் தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.
ரோஹித் ஷர்மா 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது. இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர்.
ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷரம்வை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் சாரமா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் 2024 மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் ரோகித் சர்மாவின் 10 வருட கேப்டன்ஷிப் முடிவுக்கு வந்துள்ளது இது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, ரோகித் சர்மா இதுவரை மும்பை அணியின் கேப்டன் 158 போட்டிகளில் விளையாடி உள்ளார் அதில் 87 போட்டிகளில் வெற்றியும் 67 போட்டிகளில் தோல்வியும் நான்கு போட்டிகளில் ட்ராவிலும் முடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
Hardik pandya is almost Ruled out of IPL 2024
— Raja Babu (@GaurangBhardwa1) December 23, 2023
Rohit Sharma and Bumrah : pic.twitter.com/fliiTfQFnz
ஆனால் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மும்பை அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா IPL2024 போட்டியில் அவர் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.அவருக்கு பதில் யார் கேப்டன்சி செய்வார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அதில் சூர்யகுமார் யாதவ் அல்லது பும்ரா என்று பேச்சுக்கள் தற்போது எழுந்துள்ளது. இந்த செய்தியை கேட்ட மும்பை ரசிகர்கள் உற்சாகத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகினர். இது தான் கர்மா என்றும் பலர் கூறி வருகின்றர்.