அக்சர் பட்டேல் டெல்லிக்கு கொடுத்த ஆக்சிலரேட்டர், 19.4 ஓவர்களில் ஆல் அவுட் செய்த மும்பை இந்தியன்ஸ்.
ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடந்த 16வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டன. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங் போட முடிவு செய்தது. அது அவர்களுக்கு ச
ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடந்த 16வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டன. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங் போட முடிவு செய்தது. அது அவர்களுக்கு சரியான முடிவு தான் என்று பிறகு தான் அவர்களுக்கு தெரிந்தது.
இந்நிலையில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 10 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே அடித்து ஹ்ரிதிக் சோக்கினிடம் விக்கெட்டை பறி கொடுத்து மீண்டும் டெல்லி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். சொல்லப்போனால் தொடக்க ஆட்டக்காரர்கள் டெல்லி அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் முதல் 6 ஓவர்களில் அடித்து கொடுப்பதுதான் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். ஆனால் இந்த முறை சரியான தொடக்க வீரர்கள் டெல்லி அணியிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் முதல் மனிஷ் பாண்டே பொறுமையாக விளையாடி 18 பந்துகளில் 26 ரன்களில் சாவ்லாவிடம் ஆட்டமிழந்தார். யாஷ்வும் ,பவுலும் மற்றும் லலித் யாதவ்வும் செர்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் நிதானமாக ஆடிய அணியின் கேப்டன் வார்னர் 43 பந்துகளில் 50 ரன்களை பூர்த்தி செய்தார். அவருடன் இணைந்த அக்சர் பட்டேலும் மும்பை அணியின் பௌலர்களை நான்கு பக்கமும் அடித்து விளாசினார்கள்.
இவர்களின் பார்ட்னர்ச்சிப் மிகவும் சிறப்பாக இருந்த காரணத்தினால் 200 ரன்கள் வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஆக்ஸர் படேல் 24 பந்துகளில் 54 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு அடுத்த ஓவரில் பெரிய மாற்றம் நடந்தது. 18.3 ஓவர்களில் வார்னேர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு வந்த அனைவரும் அடுத்து அடித்து அவுட் அகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.
இந்த அதிர்ச்சிக்கு முக்கியமான காரணம் பியூஸ் சாவுலா. இவர் பிரமாதமாக பந்துகளை வீசி நட்சத்திர பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்தார். இந்நிலையில் டெல்லி அணி 19.4 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. ஒருகட்டத்தில் 200 ரன்கள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்ந்து டெல்லியை ஆல் அவுட் செய்தார்கள். இந்நிலையில் அடுத்து ஆடி வரும் மும்பை இந்தியன்ஸ் சரியான ஆட்டத்தை காட்டி வருகின்றனர்.