அடுத்தடுத்து வெளி வந்த மும்பை அணி பற்றிய அதிர்ச்சி செய்திகள்! வருத்ததில் மும்பை ரசிகர்கள்!
கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் நடத்தப்படும் பிரபலமான கிரிக்கெட் தொடர் மற்றும் வெற்றிகரமான கிரிக்கெட் தொடர் என்றால் அது ஐபிஎல் மட்டுமே இந்த ஐபிஎல் போட்டிகளில் தவிர்க்க முடியாத அணியாக உருவடுத்து இருக்கும் அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒன்று. ஐந்து முறை ஐபிஎல் தொடர்களை வென்று அ
கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் நடத்தப்படும் பிரபலமான கிரிக்கெட் தொடர் மற்றும் வெற்றிகரமான கிரிக்கெட் தொடர் என்றால் அது ஐபிஎல் மட்டுமே இந்த ஐபிஎல் போட்டிகளில் தவிர்க்க முடியாத அணியாக உருவடுத்து இருக்கும் அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒன்று. ஐந்து முறை ஐபிஎல் தொடர்களை வென்று அதிகமான ஐபிஎல் தொடரை வென்ற அணி என்ற பெருமை மும்பை இந்தியன்ஸ் அணி வைத்துள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து பிளே-ஆப் க்குள் கூட செல்ல முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான நிலையில் இருந்தது. அதனால் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி தொடங்க போகும் ஐபிஎல் போட்டிகளில் தங்களின் முழு பலத்தை காட்ட வேண்டிய சூழ்நிலையில் மும்பை இந்நியன்ஸ் அணி உள்ளது.
ஆர்.சி.பி மற்றும் சி.எஸ்.கே
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபிக்கு எதிராக தனது முதல் போட்டியை காண இருக்கிறது. அதை தொடர்ந்து ஏப்ரல் 6ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் எதிராக களமிறங்க இருக்கிறது. எப்போதும் இந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டிகளை ரசிகர்கள் ஆவலுடன் பார்ப்பார்கள். கடந்த இரண்டு வருடங்களாக மோசமான சூழ்நிலையில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பாதையை நோக்கி அழைத்து செல்ல வேண்டிய பொறுப்பு ரோகித் சர்மாவிற்கு இருக்கின்றது.
ரோகித் சர்மாவிற்கு இருக்கும் சவால்கள்
அதே நேரத்தில் ரோகித் சர்மாவிற்கு இந்திய அணியிலும் சில முக்கியமான பொறுப்புகளும், சவால்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆம் 2023 நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த உடனே அதற்கு அடுத்த வாரத்திலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஒரு நாள் தொடர் போட்டிகள் நடக்கவிருக்கிறது. இதற்கிடையில் ஆசிய கோப்பைகளுக்கான தொடர்களும் நடக்க இருக்கின்றனர். இப்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் இல்லாமல் இந்திய அணிக்காகவும் விளையாட வேண்டிய பொறுப்பும் சவால்களும் ரோகி சர்மாவிற்கு உள்ளது.
ஏற்கனவே பலம் இழந்த மும்பை அணி
இந்த நிலையில் தான் மும்பை அணியின் நட்சத்திர வீரர்கள் ஆன பும்முரா, ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோர் அணியிலிருந்து விலகியது அணிக்கு பின்னடைவாக இருக்கின்றது. இப்படி மும்பை அணிக்கு பலமாக இருந்த வீரர்கள் அணியில் இருந்து விலகியதால் பலமிழந்து காணப்படுவதாக ரசிகர்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தருமாறு மற்றொரு சம்பவமும் நடந்திருக்கின்றது. ஆம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவும் அணியில் இருந்து விலகப் போகிறாராம்.
ரோகித் சர்மா விலகல்
ஆம், நடக்க இருக்கும் 16 வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக விளையாட இருக்கும் ரோகித் சர்மா ஐபிஎல் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதி சீசனிலேயே விளையாடாமல் ஓய்வு எடுப்பார். எனவும் அந்த நேரங்களில் மும்பை அண்ணியின் கேப்டனாக சூர்யா குமார் யாதவ் இருப்பார் எனவும் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசராக இருந்து அணியை வெற்றி பாதை நோக்கி வழி நடத்துவார் எனவும் செய்திகள் வந்தவனமே இருக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த போதிலும் இந்திய அணிக்காகதான் இவ்வாறு செய்கிறார் என ரசிகர்கள் பெருமிதம்.