அவர் என்னைப் போலவே அந்த இந்திய வீரரும் பீல்டிங்கை செட் செய்கிறார். இந்திய வீரரை புகழந்த முத்தையா முரளிதரன்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 5போட்டிகளைக் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்றது. அதில் முதல் நான்கு போட்டிகளில் இந்தியா அணி மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்

By ·

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 5போட்டிகளைக் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்றது. அதில் முதல் நான்கு போட்டிகளில் இந்தியா அணி மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நேற்று முன்தினம் ஐந்தாவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வேட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் சிறப்பாக செயல்படவில்லை.

161 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக பெண் மாசிடர்மோட்டா 53 ரன்களும் டிராவிஸ் ஹெட் 28 ரன்களும் கேப்டன் வேட் 22 ரன்களையும் அடித்து இருந்தனர்.இந்திய அணியின் வீரர்கள் போட்டியை கடைசி வரை கொண்டு சென்று இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

இந்திய அணி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே இந்திய அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ரவி பிஷ்னோய் இந்த தொடர் முழுவதும் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார். அவர் விளையாடிய 5 போட்டிகளில் சேர்த்து தலா பத்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார். இது முத்தையா முரளி தரன் கூறுகையில்,

இந்திய அணி எப்போதும் சுழற் பந்து சிறப்பாக இருந்து வருகிறது. அணில் கும்பளே முதல் ரவிச்சந்திரன் அஸ்வின் வரை போன்ற நல்ல சுழற் பந்துவீச்சாளர்களை இந்திய அணிகளை வைத்துள்ளது. தற்போது உள்ள இந்திய சுழல் பந்து இளம் வீரர்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரவி பிஷ்னோய் லெக் ஸ்பின்னராக இருந்து வித்தியாசமாக இருக்கின்றார். அவர் பந்து வேகத்தோடு வீசுவது நல்ல ஸ்லைடு செய்வது போன்று அவர் பந்து வீசுகிறார். மற்றொரு முனையில் அக்சர் பட்டேல் நல்ல முறையில் சிறந்த பந்துவீசி வருகிறார்.

அவர் தந்து அதிகம் திருப்ப கூடிய வீரர் கிடையாது என்றாலும் அவர் அந்த பந்தை துல்லியமாக வீசுவதில் வல்லவராக இருந்து வருகிறார். என்னை மாதிரி பில்டிங் அமைக்கப்படும் அமைத்து வருகிறார். அதற்கு தகுந்த மாதிரி அவர் பதிவு செய்யும் பேசுவது முக்கியம்தான் எப்பொழுதும் ஒரே ஃபீலிங் அமைப்பை வைத்து அதற்கு தகுந்தாற்போல் பந்து வீச வேண்டும். அதே சமயத்தில் பேட்ஸ்மேன் எந்த பக்கத்தில் வலிமையானவர் என்று அறிந்து பந்து வீச வேண்டும் என்று உனக்கு கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை